உலக நாயகன் கமல்ஹாசன் மகள் என்ற அடையாளத்துடன் 7-ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதிஹாசன், தொடர்ந்து தனுஷூடன் 3, விஜயுடன் புலி, அஜித்துடன் வேதாளம், சிங்கம் 3, பூஜை, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ஸ்ருதி சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா உள்ளிட்ட 2 படங்களிலும் நாயகியாக நடித்திருந்தார். தற்போது சலார் என்ற படத்தில் பிரபாசுடன் நடித்துள்ளார்.
மேலும் தி ஐ என்ற படத்தின் மூலம் ஆங்கிலப்படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமணம், அப்பாவின் தமிழ் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். நான் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறேன். அதனால் தமிழ் சினிமாவிற்கு வர முடியவில்லை. அப்பாவை பார்த்தே பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இப்போது நான் இங்கு இருகிறேன் அவர் வேறு வெளிநாட்டுக்கு ஷூட் போய்ட்டார்.
ஆனால் உலகின் எங்கு சென்றாலும் நான் தமிழ் பெண்தான். எனது இதயம் இங்குதான் இருக்கிறது. மும்பையில் தங்கியிருந்தாலும் என் நண்பர்கள் அனைவருக்கும் நான் தமிழ் பொண்ணு என்றுதான் தெரியும். அவர்களும் அப்படித்தான் பேசுவார்கள். ஆனால் அப்பா பேசுற அளவுக்கு தமிழ் எனக்கு தெரியாது சில சமயம் அவர் பேசுவது எனக்கு புரியாது. அப்படி அவர் பேசும்போது நிறுத்துங்க அப்பா திருப்பி சொல்லுங்க என்று சொல்லிவிடுவேன்.
அதேபோல் அப்பா அம்மா இருவருமே வெளிப்படையான குணம் கொண்டவர்கள். நாங்கள் எப்பவாது பேசிக்கொள்வோம். அப்போதும் எங்களது பேச்சு சாதாரணமாகத்தான் இருக்கும். இந்த டிஜிட்டல் காலத்தில் எங்கு சென்றாலும் போட்டோ எடுக்கும் கலாச்சாரம் பெருகிவிட்டது. அதேபோல் ஆண்களும் பெண்களும் சமம் என்பதை அனைவரும் பெச வேண்டும். இந்த விஷயத்தில் எனது பார்ட்னரை நான் பெருமையாக நினைக்கிறேன்.
திருமணம் என்பது நம்பிக்கை அல்ல. அது ஒரு கல்வி நிலையம் போன்றது. ஆந்த கல்வி நிலையத்திற்கு எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை என்றால் இவ்வளவு வருடம் கடந்திருக்க முடியாது. ஆனால் சமூகத்திற்கு எது பிடிக்குமோ எதை தேவையே அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இது எனக்கு மிகவும் முக்கியமானது. நடந்தால் நடக்கும். எதையும் உறுதியாக சொல்ல முடியாது. அதே சமயம் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil