scorecardresearch

இது சைவ முத்தமா? அசைவ முத்தமா? காதலருடன் ஸ்ருதிஹாசன் வீடியோ

ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி வரும்

இது சைவ முத்தமா? அசைவ முத்தமா? காதலருடன் ஸ்ருதிஹாசன் வீடியோ

முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன் தனது காதலருடன் மாறி மாறி முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருருகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானி 7-ம் அறிவு படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சுருதிஹான். தொடர்ந்து 3, பூஜை, வேதாளம் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் நடித்த இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்திருந்தார். உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்தமகள் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்த சுருதி தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தி வரும் சுருதிஹாசன், பொங்கல் தினத்தில் தெலுங்கில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்திருந்தார். தற்போது பிரபாசுடன் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், சாந்தனு சுருதிக்கு முத்தம் கொடுப்பதும் பதிலுக்கு சுருதி சாந்தனுவுக்கு முத்தம் கொடுப்பதும் போன்ற வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress shruti haasan kiss video with her boyfriend

Best of Express