வசூல் வேட்டையில் கூலி; மகிழ்ச்சி ஸ்ருதி ஹாசன் பிளாஸ்டிக் சர்ஜரி ட்ரோல்களுக்கு பதிலடி!

கூலி பட வெற்றியின் மத்தியில், ஸ்ருதி ஹாசன் தனது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் குறித்து விமர்சிக்கும் நெட்டிசன்களுக்குக் கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது.

கூலி பட வெற்றியின் மத்தியில், ஸ்ருதி ஹாசன் தனது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் குறித்து விமர்சிக்கும் நெட்டிசன்களுக்குக் கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
shrutij Haasan

கூலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், தன்னைப்பற்றி வெளியில் வரும் வதந்திகள் மற்றும் ட்ரோல்களக்கு பதில் கொடுத்துள்ளார்.

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாநத் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14 அன்று வெளியான 'கூலி' திரைப்படம், வெளியானது முதல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது. இந்த படம் 6 நாட்களில் ரூ.216 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றிலேயே மிக வேகமாக ரூ.200 கோடியைக் கடந்த படங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று மட்டும், இப்படம் சுமார் ரூ.9.50 கோடி வசூலித்து, அதன் வசூல் வேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

படத்தின் வெற்றி, ஸ்ருதி ஹாசன் உட்பட படக்குழுவினருக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 'கூலி'யின் வெற்றி ஒருபுறம் இருக்க, ஸ்ருதி ஹாசன் அளித்த நேர்காணல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஎச்ஆர் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், அவர் தனது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் குறித்துப் பேசினார். "நான் வெளிப்படையாகப் பேசியபோது, 'ஓ, இது ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி கடை' என்று பலர் விமர்சித்தனர். ஆனால், நான் என்ன செய்துள்ளேன், எவ்வளவு செய்துள்ளேன் என்பது எனக்குத் தெரியும், மற்றவர்கள் எவ்வளவு செய்துள்ளார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

இது நேர்மைக்காக நான் கொடுக்கும் விலை. இது பரவாயில்லை, நான் ஒருபோதும் அதை ஊக்குவிப்பதில்லை. இது எனது தனிப்பட்ட விருப்பம். காதலில், வாழ்க்கையில், வேலையில், நீங்கள் உண்மையைப் பேசும்போது அல்லது எதையாவது வெளிப்படையாகச் சொல்லும்போது, உங்கள் மீது எப்போதும் விரல்கள் நீட்டப்படுமாம். ஆனால், இது ஒரு நல்ல விலை" என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். ஸ்ருதி ஹாசனின் இந்த வெளிப்படையான, நேர்மையான பதில் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Advertisment
Advertisements

சமீபத்தில், 'கூலி' படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக சென்னை வெற்றி திரையரங்கிற்கு வந்த ஸ்ருதி ஹாசனின் கார், பாதுகாப்பு அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டது. அவரும் அவரது நண்பர்களும் காரில் இருந்து சிரிக்கும் ஒருவீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஸ்ருதி ஹாசன் சிரித்தபடியே, "நான் தான் இந்தப் படத்தில் இருக்கிறேன். தயவுசெய்து என்னை விடுங்கள் அண்ணா. நான் தான் ஹீரோயின் சார்" என்று கூறுவது அனைவரையும் கவர்ந்தது. இந்தச் சம்பவம், திரையுலக நட்சத்திரங்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையிலான சுவாரஸ்யமான தருணங்களைக் காட்டுகிறது.

Shruti Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: