/indian-express-tamil/media/media_files/2025/09/17/actress-shruti-raj-and-kavitha-vijay-2025-09-17-19-19-16.jpg)
90-களில் முன்னணி நடிகர்களுக்கு மகள், தங்கை, என நடித்த நடிகைகள் பலரும் இப்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் திரைப்படத்தில் விஜய்க்கு தங்கை கேரக்டரில் நடித்த நடிகைகள் இப்போது பிரபலமான சீரியல் நடிகைகளாக உள்ளனர்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகராக பல விமர்சனங்களை கடந்து வெற்றி பெற்றவர் நடிகர் விஜய். தற்போது அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள இவர், வரும சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளார். தனது திரை வாழ்க்கையில் தொடக்கத்தில் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருந்தார். அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் மாண்புமிகு மாணவன்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/17/sister-character-of-vijay-2025-09-17-18-45-56.jpg)
1996-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜய் கல்லூரி மாணவராக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக ஸ்வப்னா பேடி என்ற புதுமுக நடிகை நடித்திருந்தார். அதேபோல் விஜயின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத், மன்சூர் அலி கான், விஜயகுமார், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் தான் நடிகை கவிதா. முன்னதாக பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர், மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்திலும் நடித்திருந்தார்.
தொடர்ந்து, மதுரை மீனாட்சி மனைவி வந்த நேரம், உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர், விஜயுடன் மாண்புமிகு மாணவன், அஜித்துடன் வான்மதி, முகவரி, ராமராஜன் தங்கையாக சீரிவரும் காளை ஆகிய படங்களில் நடித்துள்ள கவிதா, குடும்பத்தில் இவர் தான் நடிப்புத்துறைக்கு வந்த முதல் பெண் என்று ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் நடித்திருக்கொண்டிருந்த கவிதா ஒரு கட்டத்தில் சீரியல் வாய்ப்பு வரவே அதை நோக்கி சென்று தற்போது முன்னணி சீரியல் நடிகையாக இருக்கிறார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/17/shruthi-raj-2025-09-17-18-52-45.jpg)
கவிதா தமிழில் பல சீரியலிகளில்நடித்துள்ளதுபோல், இந்த படத்தில் நடித்த இன்னொரு நடிகையும் தற்போது முன்னணி சீரியல் நடிகையாக இருக்கிறார். அந்த நடிகை தான் ஸ்ருதி ராஜ். இவர் தமிழில் அறிமுகமான படம் மாண்புமிகு மாணவன் படம் தான். இந்த படத்தில் விஜயின் க்ளாமெட் அவரின் நண்பரின் காதலியாக வருவார். இவரை கொலை செய்தவர்களை பழிவாங்குவது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்திற்கு, பிறகு, கன்னடத்தில், அந்தமான் படத்தில் சிவராஜ்குமருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
2009-ம் ஆண்டு, தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி ராஜ் அடுத்து, அழகு, தாலாட்டு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார், தற்போது சன்டிவியின் லட்சுமி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us