2000-ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என்று பெயரெடுத்த இவர், தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ்,உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிபடங்களை கொடுத்துள்ளார். கடைசியாக தமிழில் பட்டாஸ் படத்தில் நடித்திருந்த சினேகா அடுத்து தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தற்போது சினேகா குறித்து முத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ள தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சினேகா பிரஷாந்துடன் இணைந்து நடித்த விரும்புகிறேன் படத்தின் போது பாம்புகள் இருந்த கிணற்றில் என்னை இறக்கி விட்டு நடிக்க வைத்துவிட்டார் என்று கூறியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த அப்படத்தின் இயக்குனர் கிணற்று காட்சி படத்தில் முக்கிமான காட்சி அதில் பாம்புகள் இல்லை லைட்மேன்கள் கூட இருந்தும் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக இயக்குனர் கூறினார்
ஆனால் விரும்புகிறேன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெந்றது. சினேகாவுக்கும் நல்ல பெயர் கிடைத்ததால் அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதே சமயம் அவரை சுற்றி கிசுகிசுக்களும் பரவத்தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில், போஸ், பார்த்திபன் கனவு, உள்ளிட்ட சில படங்களில் ஸ்ரீகாந்துடன் இணைந்து நடித்த சினேகா அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது.
/indian-express-tamil/media/media_files/xyxhh7JdPdbsETcTI8FH.jpg)
அதேபோல் புதுப்பேட்டை படத்தில் பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டேன் என்று நினைத்து சினேகா அழுதபோது அப்படத்தின் நாயகன் தனுஷ் சினேகாவுக்கு ஆறுதல் கூறி இந்த கேரக்டர் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும் என்று கூறியுள்ளார். அதேபோல் புதுப்பேட்டை படம் சினேகாவுக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது.
கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த சினேகா கடந்த 2012-ம் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு தற்போது வரை நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருவதாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“