/tamil-ie/media/media_files/uploads/2023/03/Sneha.jpg)
2000-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இங்கனே ஒரு நிலாபக்ஷி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சினேகா. தொடர்ந்து தமிழில் என்னவளே படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Sneha-5.jpg)
அதன் பிறகு ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்மந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஜனா, வசூல்ராஜா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Sneha-4.jpg)
தனுஷூடன் இணைந்து இவர் நடித்த புதுப்பேட்டை படம் நல்ல வரவேற்பை பெற்று இன்றும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Sneha-3.jpg)
அதேபோல் கமல், விஜய், அஜித் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்ளுடன் சினேகா பல வெற்றிப்படங்கயளை கொடுத்துள்ளார். சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராஃப் படத்தில் சினேகாவின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Sneha-6.jpg)
அதேபோல் சேரனுடன் இவர் நடித்த பிரிவோம் சந்திப்போம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதை வென்றிருந்தார். கடைசியாக தமிழில் தனுஷூடன் பட்டாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Sneha-2.jpg)
அதன்பிறகு சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான கிறிஸ்டோபர் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகாவுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Sneha-1.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சினோக அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Sneha-7.jpg)
ரசிகர்கள் மத்தியில் புன்னகை அரசி என்று போற்றப்படும் நடிகை சினேகா தனக்கே உரிதான சிரிப்புடன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us