scorecardresearch

2 குழந்தைக்கு தாய்னு சொன்னா நம்ப மாட்டாங்க! சினேகா ஸ்டைலிஷ் கிளிக்ஸ்

Tamil Cinema Update : சினோகா கடைசியாக தமிழில் பட்டாஸ் என்ற படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு தற்போது சா பூ த்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

2000-ம் ஆண்டு மலையளத்தில் வெளியான இங்கனே ஒரு நிலபக்ஷி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை சினேகா. தொடர்ந்து என்னவளே படத்தில் மாதவனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான அவர், தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம், விரும்புகிறேன், புதுப்பேட்டை வசூல் ராஜா, பவானி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் கமல், விஜய் அஜித் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சினேகா, கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சினோக கடைசியாக தமிழில் பட்டாஸ் என்ற படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு தற்போது சா பூ த்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சினோக அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணைத்தில் வைரலாகி வருகிறது. .இநத புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் 2 குழந்தைகளுக்கு அம்மா, 40 வயதை கடந்தாலும் சினேகா என்றும் இளமைதான் என்று கூறி வருகின்றனர்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress sneha new stylish photoshoot update