/indian-express-tamil/media/media_files/2025/09/04/rajinikanth-sonia-2025-09-04-11-03-59.jpg)
குழந்தை நட்சத்திரமாக பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஒரு படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார். அதே சமயம், ரஜினிகாந்த் படத்தில் அறிமுகமான இவர் ரேவதிக்கு தங்கையாகவும் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி வருவது வழக்கம் தான். அதே சமயம் அவர்கள் அனைவருமே பெரிய நட்சத்திரங்களாக உயர்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சில நடிகைகள், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றும் சினிமா அல்லது சின்னத்திரையில் தங்களது திறமையை நிரூபித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பிரபல இயக்குனரின் மகளாக இருப்பவர் தான் நடிகை சோனியா.
தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் பெரிய வெற்றிகளை குவித்த கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே. செல்வமணி இயக்குனராக அறிமுகமான இந்த படம், சீரியல் கில்லர் ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. இந்த படத்தில ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி கேரக்டரில் விஜயகாந்த் நடித்திருந்த நிலையில், அவருடன் சரத்குமார் வில்லனாக நடித்திருந்த இந்த படததில் ராதாரவி, ஆனந்த்ராஜ், ரூபினி, நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தொடர்ந்து காணாமல்போகும் பெண்களை கண்டுபிடிக்க களமிறங்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்பமாக அமைந்தது. இந்த படம் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது. படத்தில் கேப்டன் விஜயகாந்த், ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு மகளாக நடித்த நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்த நடிகை சோனியா தான்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், மௌனராகம், மாப்பிள்ளை, அழகன், சிஷ்யா, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார். 2003-ம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தில், விவேக் – சோனியா இருவரும் முதல் மரியாதை படத்தை ரீக்ரியேட் செய்திருப்பார்கள். அதேபோல் 2006-ம் ஆண்டு சுந்தர்.சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் தனது கணவர் போஸ் வெங்கட்டுக்கு மனைவியாகவே நடித்திருப்பார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
தமிழில் பல சீரியல்கள் வெப் தொடர்களில் நடித்துள்ள சோனியா, பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமையுடன் வலம் வருகிறார். உப்பு புளி காரம் என்ற வெப் தொடரில் நடித்த சோனியா, தற்போது மீனா, என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். மெட்டி ஒலி சீரியல் மூலம் அறிமுகமான இவரது கணவர் போஸ் வெங்கட், இதுவரை கன்னிமாடம், சார் என இரு படங்களை இயக்கியுள்ளார். இவரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
அதேபோல் பல வெற்றிப்படங்களில், வில்லனுக்கு குரல் கொடுத்துள்ளார். கடைசியாக விடுதலை 2, டி.என்.ஏ ஆகிய படங்களில் நடித்திருந்த பொஸ் வெங்கட், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஈரநிலம் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவல் அறிமுகமமானார். தமிழ் மட்டும் இல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சோனியாவின் தம்பி டின்கு விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.