'கவர்ச்சி காட்டி சமையல் செய்து கவனம் ஈர்க்கும் சூழலில் நான்': பிரபல நடிகை வேதனை

சினிமாவில் நடக்கும் உண்மைகளை சொல்லி என்னை நானே பலியாக்கிக் கொண்டேன். படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன்.

சினிமாவில் நடக்கும் உண்மைகளை சொல்லி என்னை நானே பலியாக்கிக் கொண்டேன். படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன்.

author-image
WebDesk
New Update
Sri reddy

சினிமா நடிகர்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சினிமா வட்டாரத்தில் பிரபலமான நடிகை தான் ஸ்ரீ ரெட்டி. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'நேனு நானா அபத்தம்' என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், அடுத்து அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். குறைவாக படங்களே நடித்திருந்தாலும்,  இவரது பெயரை சொன்னாலே ரசிகர்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் அளவுக்கு பிரபலமாக உள்ளார்.

Advertisment

மேலும் அவ்வப்போது சினிமாவின் முன்னணி நடிகர்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் ஸ்ரீரெட்டி, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், சினிமாவில் முன்னேற, செய்ய வேண்டியதை செய்துதான் ஆக வேண்டும். நான் 'மீ டூ' புகார் பற்றி பேசும்போது, நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் கூட குரல் கொடுக்கவில்லை. போதைப்பொருள் வழக்கில் கூட அவர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தொழிலும், பணமும், பேரும், புகழும்தான் முக்கியம்.

'லேடி சூப்பர் ஸ்டார்' என்று சொல்லிக்கொள்ளும் நயன்தாரா, லேடிஸ் பிரச்சனைக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை? புதிதாக வரும் நடிகைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது, பெரிய ஆட்களுடன் சண்டை போடாதீர்கள். பிரச்சனைகள் குறித்து வெளியே சொல்லாதீர்கள். பிடிக்காவிட்டால் அங்கிருந்து நகர்ந்து விடுங்கள். சினிமாவில் நடக்கும் உண்மைகளை சொல்லி என்னை நானே பலியாக்கிக் கொண்டேன். படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன்.

இப்போது நானே தனியாக ஒரு 'யூடியூப்' சேனல் தொடங்கி, கவர்ச்சியை காட்டி சமையல் செய்து கவனம் ஈர்க்கிறேன். சமையலுக்கு எதுக்கு கவர்ச்சி என்று நீங்கள் யோசிக்கலாம். வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் எனக்கு வேறு வழியில்லை. எனக்கு பிடிக்கவில்லை என்றாலும், கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். யூடியூப்' சேனல் மூலம் கிடைக்கும் வருமானம் இப்போது எனக்கு கைகொடுக்கிறது என்று கூறியுள்ளார்.

tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: