Advertisment
Presenting Partner
Desktop GIF

6-வது ஆண்டு நினைவு தினம்... தனது அம்மா ஸ்ரீதேவியுடன் ஜான்வி, குஷி கபூர் : வைரல் போட்டோ

ஸ்ரீதேவி தனது 4 வயதில் 1967-ம் ஆண்டு வெளியான கந்தன் கருணை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

author-image
WebDesk
New Update
Sridevi Death Anniversary

தனது குழந்தைகளுடன் ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவியின் 5-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகை குஷி கபூர் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இந்திய சினிமாவில் தனது சிறப்பாக நடிப்பின் மூலம் பெரிய ஆளுமையாக இருந்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. 1963-ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த ஸ்ரீதேவி தனது 4 வயதில் 1967-ம் ஆண்டு வெளியான கந்தன் கருணை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இந்த படத்தில் கடவுள் முருகன் வேடத்தில் நடித்து அசத்திய ஸ்ரீதேவி அடுத்து வெளியான துணைவன் படத்திலும் அதே முருகன் வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அதிகமாக பக்தி படங்களில் கடவுள் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஸ்ரீதேவி, 1972-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான வசந்தமாளிகை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கததில் கமல்ஹாசன் ரஜினிகாந்த் இணைந்து நடித்த மூன்று முடிச்சு படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு காயத்ரி கவிக்குயில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஸ்ரீதேவிக்கு பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து பாலு மகேந்திரா இயக்கத்தில் 1982-ம் ஆண்டு வெளியாளன மூன்றாம் பிறை படத்தின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார்

மூன்றாம் பிறை படத்திற்காக அவருக்கு தமிழக அரசின் சிறந்த நடிகைகான விருது வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் அதிகமாக ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்திருந்த ஸ்ரீதேவி, சிவாஜியுடன் கவரிமான் படத்தில் மகளாகவும், சந்திப்பு என்ற படத்தில் அவருக்கே ஜோடியாகவும் நடித்திருந்தார். 1986-க்கு பின் இந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய ஸ்ரீதேவி, இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 

தொடர்ந்து 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி அங்கேயே மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஸ்ரீதேவி இறந்து 5 ஆண்கள் கடந்துள்ள நிலையில், இவரது நினைவு தினமான இன்று, அவரது மகள் குஷி கபூர் தனது அம்மா ஸ்ரீதேவியுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு அம்மாவுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sridevi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment