ஒரு பக்க முகம் வேலை செய்யல; தூங்கும்போது ஒரு கண் திறந்தே இருக்கும்: பிரபல சீரியல் நடிகைக்கு வந்த வித்தியாசமான பாதிப்பு!

தூங்கும்போது கூட ஒரு கண் மூடி இருந்தால் ஒரு கண் திறந்துகொண்டு இருக்கும். இதனால் எந்த வேலையும் என்னால் செய்ய முடியவில்லை. ஒரு பக்கம் கண்ணை மூடவே முடியாமல் இருந்தது.

தூங்கும்போது கூட ஒரு கண் மூடி இருந்தால் ஒரு கண் திறந்துகொண்டு இருக்கும். இதனால் எந்த வேலையும் என்னால் செய்ய முடியவில்லை. ஒரு பக்கம் கண்ணை மூடவே முடியாமல் இருந்தது.

author-image
WebDesk
New Update
Subthra News

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருப்பவர் சுபத்ரா. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெயா டிவியில் வெளியான சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், அதனைத்தொடர்ந்து பல சீரியல்களில், ஹீரோயின், வில்லி, குணச்சித்திரம் என பல தரப்பட்ட கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisment

மேலும் ஒரு சில திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்துள்ள சுபத்ரா, தேவதை என்ற சீரியலில், இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். வெப்தொடர்கள் திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், சமீபத்தில் ரேவதி நடிப்பில் வெளியான குட் வைப் வெப் தொடரில் ஒரு முக்கிய வழக்கறிஞர் கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது டெலி விகடன் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தனது திரைத்துறை அனுபவம் மற்றும் சீரியல்களில் தற்போது இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசியுள்ளார்.

குட்வைப் தொடரில் ஒரு மாதம் கால்ஷீட் கேட்டிருந்தார்கள். அதில் நடித்தது என்னமோ 10 நாட்கள் தான். இப்போது அந்த வெப் தொடர் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்த தொடரில் கமிட் ஆனதற்கு பின், தேன்கனிக்கோட்டை என்ற இடத்திற்கு படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அப்போது அங்கிருக்கும் பனியின் சூழல் காரணமாக காதுக்கு அருகில் உள்ள நரம்பு பஸ்ட் ஆகி என் முகத்தில் ஒரு பக்கம் செயலிழந்துவிட்டது. இதனால் அடுத்து என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை.

தூங்கும்போது கூட ஒரு கண் மூடி இருந்தால் ஒரு கண் திறந்துகொண்டு இருக்கும். இதனால் எந்த வேலையும் என்னால் செய்ய முடியவில்லை. ஒரு பக்கம் கண்ணை மூடவே முடியாமல் இருந்தது. சாப்பிடுவதற்கு கூட முடியாமல் கஷ்டமாக இருந்தது. 3 நாட்கள் நன்றாக இருந்து 4-வது நாள் என்னால் படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும் அப்போவும் பரவாயில்லை. நீ இங்க வா பார்த்துக்கொள்வோம் என்று கூறி ரேவதி மேம் பொறுமையா படப்பிடிப்பு நடத்தினார்கள்.

Advertisment
Advertisements

இந்த பிரச்னையால் நான் ரொம்ப பயந்துவிட்டேன். நடிப்புக்கு முகம் தான் மிகவும் முக்கியம். இது சரியாகவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்ற பயம் எனக்கு வந்துவிட்டது. ஆனால் சிலருக்கு இந்த மாதிரியாக பாதிப்புகள் வரும். திருப்பி அதற்காக சிகிச்சை எடுத்தக்கொண்டால் குணமாகிவிடலாம். அந்த நேரத்தில் இப்படி ஒரு தாக்கம் வந்தது உண்மையில் மறக்க முடியாத ஒரு தருணம் என்ற சுபத்ரா கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: