கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் நடிகை சுகன்யாவுடன் ஒரு பெண் இருந்ததை பார்த்த நெட்டிசன்கள் அது சுகன்யாவின் மகள்தான் என்று கூறி வந்த நிலையில், இது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் சுகன்யா. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார். விஜயகாந்த்துடன் சின்னக்கவுண்டர், கமல்ஹாசனுடன் இந்தியன், உள்ளிட்ட படங்களில் நடித்த சுகன்யா பரதநாட்டிய கலைஞரும் கூட.
நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் இருக்கும் சுகன்யா, சின்னத்திரையிலும் ஆனந்தம் சீரயில் மூலம் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது இசையிலும் சாதித்து வரும் சுகன்யாக இசை ஆல்பங்களை தொகுத்து வழங்கும் பணிகளை செய்து வருகிறார். சில வருடங்களாக நடிப்பில் இருந்து விலகியுள்ள சுகன்யா, தற்போது பொதிகையில் வெளியாகி வரும் சக்தி ஐபிஎஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் –ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சுகன்யா, கடந்த சில வருடங்களாக சுகன்யாவின் மகள் இவர்தான் என்று பரவி வரும் ஒரு புகைப்படம் குறித்து விளக்கம் அளித்திருந்தார், அந்த புகைப்படத்தை நானும் பார்த்தேன். இதில் இருப்பது எனது மகள் அல்ல. எனது அக்காவின் மகள். எனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தேன். அதில் இவர் எனது அக்கா மகள் என்று குறிப்பிட்டு இருந்தேன். இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நான் திருமண வாழ்க்கையில் ஒரு சில மாதங்களே இருந்தேன். அதன்பிறகு எனக்கு விவாகரத்து கேட்டு கோர்ட்டில் அப்ளை செய்துவிட்டேன். ஆனால் விவாகரத்து கிடைப்பதற்கு பல வருடங்கள் ஆனது. இது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான் என்றாலும் இப்போது எனது மகள் என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.நானும் இந்த செய்திகளை பார்த்து வருகிறேன். எனது அக்கா மகளும் சித்தியால் இப்போது நானும் பிரபலமாகிவிட்டேன் என்று ஜாலியாக பேசி வருகிறாள் என சுகன்யா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“