80-90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த அம்பிகா, சுஹாசினி இருவரும், மேடையில் பேசிய பேச்சு இணையத்தில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அம்பிகா போகவே சுஹாசினி நடித்து காட்டி அசத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக சிவாஜி கணேசன் தொடங்கி, ரஜினி கமல், சத்யராஜ் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் அம்பிகா. இவர் எம்.ஜி.ஆருடன் நடிக்கவில்லை என்றாலும், அவருடன் நெருங்கிய நட்புறவில் இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல் இவரது தங்கை, ராதாவும் தமிழ் சினிமாவில் பல வெற்றிகளை கொடுத்தவர். அம்மபிகா ராதா இருவரும் இணைந்தும் பல படங்களில் நடிதுள்ளனர்.
இவர்களை போலவே, சினிமாவில் உச்சம் தொட்ட நடிகை தான் சுஹாசினி. இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி, கமல்ஹாசனின் அண்ணன் மகள் என பல அடையாளங்கள் இருந்தாலும், ரஜினி, தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சுஹாசினி, நிகழ்ச்சி தொகுப்பாளர் இயக்குனர் என பன்முக திறமையுடன் வலம் வருகிறார். தமிழில் வெளியான பல படங்களை தெலுங்கில் ரீமேக் செய்யும்போது அதில் ஹீரோயினாக நடித்தவர் சுஹாசினி தான்.
இதனிடையே சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில், நடிகை அம்பிகாவுக்கு, சுஹாசினி விருது வழங்கினார். அப்போது இருவருக்கும் இணைந்து சினிமாவில் பல சுவாரஸ்யமான செய்திகளை பகிர்ந்துகொண்டனர். அந்த வகையில் அம்பிகா, ராதா இருவரும் இணைந்து நடித்த எங்கேயே கேட்ட குரல் படம், தமிழில் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஷோபன் பாபு நாயகனாக நடித்த இந்த படத்தில் அம்பிகா நடித்த கேரக்டரில் கமிட் ஆனவர் தான் சுஹாசினி. ஆனால், ராதிகா வந்தவுடன், அந்த கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.
இதன் காரணமாக சுஹாசினிக்கு ராதா நடித்த கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேரவனில் உட்கார்ந்து அழுததாக கூறியுள்ள சுஹாசினி, மேடையில் அவன் இவன் படத்தில் நடித்த அம்பிகா மாதிரி நடித்து காட்டி அசத்தினார். அறிவு இல்ல, மூளை இல்ல, என்னையெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது, திட்டுவது என்றால் கூட நான் ஏய் புத்திசாலி என்றுதான் சொல்வேன் என் மகன் கூட அப்பா சொல்லாதீங்க அம்மா புத்திசாலி, என்ற வார்த்தையோடே பொருளே மாறிவிட்டது என்று சொல்வான்.
திட்றது எனக்கு கைவந்த கலைதான், என் வாயில் நல்லா வந்துட போகுது. இப்போ நான் நல்லா நடிக்கலனு சொல்லுங்க என் வாயில் வந்துட போகுது. ஏற்கனவே என்னை போட்டு படுத்திட்டு இருக்காங்க, நீங்க வேற கைத்தட்டலனா, என் வாழ்க்கையே கெட்டு போய்டும். இப்போ கைத்தட் போறீங்களா இல்லையா என்று மேடையில் நடித்து காட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.