காயம்பட்ட வலி அதிகம்; அவர் யாரையும் மதிக்க மாட்டார்: சில்க் ஸ்மிதா கேரக்டர் குறித்து மனம் திறந்த நடிகை சுஜாதா!

அவர் யாரையும் மதிக்க மாட்டார். ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குனர் யாரையும் மதிக்க மாட்டார். ஆனால் லைட்மேன், காபி கொடுப்பவர் உள்ளிட்டோர்களிடம் நல்ல பேசுவார்.

அவர் யாரையும் மதிக்க மாட்டார். ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குனர் யாரையும் மதிக்க மாட்டார். ஆனால் லைட்மேன், காபி கொடுப்பவர் உள்ளிட்டோர்களிடம் நல்ல பேசுவார்.

author-image
WebDesk
New Update
Silk Smitha

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து நடிகையாக மாறியவர்களில் முக்கியமானவர் சுஜாதா. ஈசன் படத்தில் வரும் ‘’ஜில்லா விட்டு ஜில்லா வந்து’’ பாடல் மூலம் பிரபலமான இவர் தற்போது திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடிகை சில்க் ஸ்மிதா குறத்து பேசியுள்ள தஙகள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

டெலி விகடன் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், எனக்கு டான்ஸ் தான் எல்லாமே, என் குழந்தைகளிடம் கூட வாழ்நாளின் கடைசி வரை நடனம் ஆடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வேன். ரஜினிகாந்தின் தளபதி படம் தொடங்கி பல படங்களில் டான்சராக பணியாற்றி இருக்கிறேன். தென்றல் சுடும் படத்தில், நான் உதவி நடன இயக்கனராக பணியாற்றினேன். அப்போது கர்ப்பமாக இருநதாலும் நடனமாடி வந்தேன்.

எனக்கு 18-ந் தேதி டெலிவரி என்று சொன்னார்கள். ஆனால் நான் 10-ந் தேதி வரை நடனம் ஆடிக்கொண்டு இருந்தேன். அந்த படத்தில் நடிகை ராதிகா என்னை பார்த்து நீ ஏ.வி.எம்.செட்டிலேயே குழந்தை பெத்துக்க போற பாரு என்று சொல்லுவார். 10-ந் தேதிக்கு பிறகும், 11, 12-ந் தேதிகளிலும் ஷூட் இருந்தது. ஆனால் செட்டில் நின்றுகொண்டே இருந்ததால் கால் வீங்கிவிட்டது. அதனால் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன். ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தேன் 18-ந் தேதி எனக்கு குழந்தை பிறந்தது.

டெலிவரி ஆகி 40 நாட்களில் மீண்டும் பணியாற்ற தொடங்கினேன். 6 மாதத்தில் வெளியூர் ஷூட்டிங்கில் பங்கேற்றேன். தளபதி படத்தில் ரஜினிகாந்துடன் ஆடியிருக்கினே். அதேபோல் அண்ணாத்த படத்தில் ஆடும்போது அவர் என்னை பார்த்துவிட்டு என்ன இப்படி சுஜாதா இப்படி ஆகிட்டாங்க என்ற கேட்டார். ஈசன் படத்தில் நடிக்கும்போது தான் நானே என்னை ஸ்கிரீனில் பார்த்தேன். அந்த பாட்டில் கூட நான் அதிகம் நடனம் ஆடியிருக்க மாட்டேன். கடைசியாக தான் ஆடினேன். அதேபோல் சந்தானத்துடன் தில்லுக்கு துட்டு படத்திலும் நடனம் ஆடியிருப்பேன் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

தொடர்ந்து சில்க் ஸ்மிதா குறித்து பேசிய ஈசன் சுஜாதா, அவரை பற்றி இப்போது தவறான தகவல்கள் அதிகம் பரவி வருகிறது. ஆனால் அவர் மிக மிக நல்லவர். தாழ்மையான குணம் கொண்டவர். அவர் வந்த புதிதில், அவரை யாராவது குறை சொல்லி இருக்கலாம். அதற்கு பழிவாங்க அவர் எதாவது செய்திருக்கலாம். அதனால் அவர் யாரையும் மதிக்க மாட்டார். ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குனர் யாரையும் மதிக்க மாட்டார். ஆனால் லைட்மேன், காபி கொடுப்பவர் உள்ளிட்டோர்களிடம் நல்ல பேசுவார்.

பெரிய ஆட்களை தவிர மற்ற அனைவரிடமும் அன்பாக அரவணைப்புடன் நடந்துகொள்வார். அவர்களிடம் குழந்தை மாதிரி பேசுவார். ஆனால் பெரிய இடத்தில் இருப்பவர்கள் வந்தால் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, பேசுவார். அவருக்கு ஏற்பட்ட வலியின் காரணமாக இவ்வாறு நடந்துகொள்வார். யாரோ பெரியவர்களிடம் தான் பட்ட கஷ்டத்திற்கு பதிலடியாக தன்னிடம் பேசும் பெரிய நபர்கள் அனைவருக்கும் இப்படித்தான் செய்வார்.

ஷூட்டிங் இல்லாத போது, டிரைவரை அனுப்பி என்னை அழைப்பார். வீட்டில் மீன் குழம்பு வைத்தேன் அதனால் என்னை அழைத்தேன் என்று சொல்வார். அவருக்கு டான்ஸ் ஆட தெரியாது. லிப் மூவ்மெண்ட் பண்ண தெரியாது. கேமரா பின்னால் இருந்து நான் சொல்லிக்கொடுப்பதை அவர் செய்வார். பெண்கள் கூட சில்ஸ் ஸ்மிதாவை விரும்புவார்கள். அனைவரும் பொறாமை படும் வகையில் இருப்பார் என்று ஈசன் சுஜாதா கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: