scorecardresearch

‘இதற்கு அப்புறம் மறுமணம் செய்து குழந்தை பிறந்தால்…’ மனம் திறந்து பேசிய நடிகை சுகன்யா

முன்னணி நடிகையாக இருந்த சுகன்யா கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பரை திருமணம் செய்துகொண்டார்

‘இதற்கு அப்புறம் மறுமணம் செய்து குழந்தை பிறந்தால்…’ மனம் திறந்து பேசிய நடிகை சுகன்யா
நடிகை சுகன்யா

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சுகன்யா 2002-ம் ஆண்டு திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில், மறுமணம் குறித்து அவர் பேசியுள்ள வீடியோ நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சுகன்யா. தொடர்ந்து எம்ஜிஆர் நகரில் என்ற படத்தில் நடித்த அவர், தனது 3-வது படமான சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை பெற்றிருந்தார்.

அதன்பிறகு, செந்தமிழ்பாட்டு, வால்டர் வெற்றிவேல், சக்கரைதேவன், மகாநதி, இந்தியன், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள சுசகன்யா, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் படத்தின் 2-ம் பாகத்தில் கமலுடன் நடித்து வருகிறார்.

திரைப்படம் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்துள்ளார். சுகன்யா. இவர் நடிப்பில் சன்டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மலையாளத்திலும் சில டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். இதனிடையே தற்போது தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன், சுகன்யாவிடம் கேள்வி கேட்கிறார். இதில் திரைத்துறையில் தனது அனுபவம், வாங்கிய விருதுகள் குறித்து கேள்விக்கு பதில் அளிக்கும் சுகன்யா இறுதியாக தனது திருமணம் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். திருமணமாகி ஒரு வருடத்தில் பிரிந்துவிட்டது துரதிஷ்டவசமானது இதை பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று சித்ரா லட்சுமணன் கேட்கிறார்.

பிடித்திருந்தால் சேர்ந்து வாழலாம் இல்லை என்றால் அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொள்ளலாம். இருவரும் மனம் ஒப்புக்கொண்டு பிரிந்தால் சரி. இல்லை என்றால் கோர்ட்க்கு சென்றுதான் ஆக வேண்டும். அக்கம் பக்கத்தினர் என்ன சொல்வார்கள் என்று யோசிக்க கூடாது. பெண்கள் தைரியமாக முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மறுமணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மறுமணம் என்று நான் இதுவரை யோசிக்கவில்லை. அதே சமயம் அதை வேண்டாம் என்றும் சொல்லவில்லை. தற்போது எனக்கு 50 வயது ஆகிறது. இனிமேல் திருமணமாகி குழந்தை பிறந்து அந்த குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுமா அல்லது பாட்டி என்று கூப்பிடுமா? எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது கண்டிப்பாக நடக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress sukanya say about her second marriage