scorecardresearch

டான்ஸ் தெரியாதுனு பொய்யா சொல்ற… பிரபல நடிகையை அடித்த கமல்ஹாசன்

கமல்ஹாசனுடன் தூங்காதே தம்பி தூங்காதே, ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

Kamal Haasan
கமல்ஹாசன் – சுலோக்ஷனா

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்த நடிகை சுலோக்ஷனா நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்கும்போது பயமாக இருந்ததாகவும் தன்னை படத்தின் பாதியில் வெளியேற்றி விடுவதாக மிரட்டியதாகவும் தனது சினிமா அனுபவங்கள் பற்றி கூறியுள்ளார்.

1968-ம் ஆண்டு துலம்பரம் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்தரமாக சினிமாவில் அறிமுகமானவர் சுலோக்ஷனா. தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், பாக்யராஜ் இயக்கத்தில் 1982-ம் ஆண்டு வெளியான தூரல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன் தூங்காதே தம்பி தூங்காதே, ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். அதேபோல் 1990-ம் ஆண்டு பிரஷாந்த் அறிமுகமான வைகாசி பிறந்தாச்சு என்ற படத்தின் அவருக்கு அம்மாவாக நடித்து தனது குணச்சித்திர வேடத்தை தொடங்கிய சுலோக்ஷனா கடைசியாக தமிழில் கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேசியுள்ள சுலோக்ஷனா, சின்ன வயசில் இருந்தே எனக்கு சேலை கட்டுவது பிடிக்காது. அதனால் தூரல் நின்னு போச்சு படத்தில் முதல் காட்சியில் நான் நடிக்கவில்லை. உண்மையாகவே அப்படித்தான் விழுந்தேன். அந்த படத்தில் நான் நடித்தேன் என்று சொல்வதை விட ரியலாக அனைத்தையும் செய்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். என்னை வைத்துக்கொண்டு பாக்யராஜ் படாதபாடுபட்டார்.

தூரல் நின்னு போச்சு படத்தில் ஆடிஷன் முடிந்து ஷூட்டிங் போய் முதல் ஷாட் எடுத்தாச்சு. அதையும் நான் முதல் டேக்கிலேயே ஓகே பண்ணிவிட்டேன். அப்போது டைரக்டர் வந்து நீ ரொம்பு குஷியா இருக்கனு நினைக்கிறேன். ஆனா இதுகு மேல நீ இந்த படத்தில் நடிக்காமல் கூட போகலாம். எடுத்ததை போட்டு பார்த்துவிட்டுதான் சொல்வேன் என்று சொன்னார். எனக்கு பயமாகிவிட்டது.

அடுத்தநாள் எல்லாம் முடிந்து முதல் ஷட் ஓகே ஆனது. அப்பாடா ரொம்ப சந்தோஷம் எனறு நினைத்தபோது, அதுக்குள்ள சந்தோஷப்படாதே பாதி படம் முடிந்த பிறகு கூட உன்னை படத்தில் இருந்து தூக்கிவிடுவேன் என்று சொன்னார். அதன்பிறகு தான் அவர் என்னிடம் விளையாட்டாக பேசியது தெரிந்தது.

அதேபோல் தான் தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கமல் சாருடன் நடித்தபோது அவர் என்னை டான்ஸ் ஆட தெரியுமா என்று கேட்டார். அப்போது தெரியாது என்று சொன்னேன். போச்சு புலியூர் சரோஜாகிட்ட மாட்டிகிட்ட என்று சொன்னார். முதலில் புலியூர் சரோஜா சொல்லிக்கொடுத்ததை ஆடி ஓகே பண்ணிட்டேன். அப்போது கமல்சார் என் முதுகில் ஓங்கி அடித்தார்.

நீ டான்ஸ் தெரியாதுனு என்ட பொய் சொல்லிருக்க அதா நல்ல ஆடுறியே என்று சொன்னார். நான் பரதநாடடியம் குச்சிப்புடி எல்லம் கத்துக்கிட்டேன் சார் கிளாசிக்கல் டான்ஸ் எனக்கு தெரியாது என்று சொன்னேன் என்று நடிகை சுலோக்ஷனா கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress sulochana sadid kamalhaasan movie

Best of Express