New Update
/indian-express-tamil/media/media_files/WLYw2a3kxa5efA4GwZLw.jpg)
மேடையில் நடிகருக்கு முத்தம் கொடுத்த சுவாதி
மேடையில் நடிகருக்கு முத்தம் கொடுத்த சுவாதி
பட நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகருக்கு நடிகை ஸ்வாதி ரெட்டி மேடையிலேயே முத்தம் கொடுத்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான டேஞ்சர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சுவாதி ரெட்டி. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியபுரம் என்ற மெகாஹிட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யச்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரி என்ற படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள சுவாதி நடிப்பில் அடுத்து தெலுங்கில் மந்த் ஆஃப் மது என்ற படம் வெளியாக உள்ளது. ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கியுள்ள இந்த படத்தில், நவீன் சந்திரா,ஸ்ரேயா நவிலே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சாய் தரம் தேஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “கல்லூரி நாட்களில் இருந்தே சுவாதி என்னுடைய சிறந்த நண்பர். இந்தப் படம் சுவாதிக்கு நல்ல வெற்றியைக் கொடுக்க வேண்டும். ஆல் தி பெஸ்ட் என வாழ்த்து தெரிவித்திருந்தார். சாய் தரண் பேச தொடங்கும்போதே அவரின் பின்னாள் வெட்கப்பட்டு ஒளிந்துகொண்ட சுவாதி பேசி முடித்தபின் திடீரென அவரை கட்டிப்பிடித்து மேடையிலேயே கன்னத்தில் முத்தம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.
Supreme Hero #SaiDharamTej cherishes his friendship with #SwathiReddy from their college days at #MonthOfMadhu trailer launch event!!🤗♥️@IamSaiDharamTej #ColorsSwathi #TFNReels #TeluguFilmNagar pic.twitter.com/kcfDI5WpSq
— Telugu FilmNagar (@telugufilmnagar) September 26, 2023
சுவாதியின் இந்த செயல் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்த நிலையில், இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.