ஜோகுமண்டி நாதம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை டாப்சி பன்னு தொடர்ந்து 2011-ம் ஆண்டு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியதை தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

கடைசியாக தமிழில் விஜய் சேதுபதியுடன் அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்திருந்தா டாப்சி தற்போது தமிழில், ஜனகனமன ஏலியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் டாப்சி தற்போது இந்தியில், 3 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஓ லட்கி ஹாய் ஹஹான் என்ற படத்தில் ஏசிபி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் கடந்த ஆண்டு வெளியான ஷபாஸ் மித்து என்ற படத்தில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் கேரக்டரில் நடித்திருந்தார்.

அதேபோல் டாப்சி அமிதாப் பச்சனுடன் நடித்த பிங்க் திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. வக்கீல் சாப் என்ற பெயரில் இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் ஆனது.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் டாப்சி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிம்மில் இருந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/