scorecardresearch

நேபாளத்தில் கொண்டாட்டம்… ஜெயிலர் நடிகையின் ஹோலி க்ளிக்ஸ் வைரல்

சாண்ட் சா ரோஷன் சஹீரொ என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா. தொடர்ந்து 2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார்.

நேபாளத்தில் கொண்டாட்டம்… ஜெயிலர் நடிகையின் ஹோலி க்ளிக்ஸ் வைரல்

ஹோலி பண்டிகை கொண்டாட்டம் தொடர்பான நடிகை தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாண்ட் சா ரோஷன் சஹீரொ என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா. தொடர்ந்து 2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி,  தனுஷூடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், ஜெயம்ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கார்த்தியுடன் பையா, சிறுத்தை உள்ளிட்ட 2 படங்களில் நடித்த தமன்னாவுக்கு இரண்டுமே வெற்றிப்படங்களாக அமைந்தது. பாகுபலி முதல் பாகத்தில் போராளியாக நடித்த தமன்னா பாராட்டுக்களை பெற்றார்.

விஜய் சேதுபதியுடன் நடித்த தர்மதுரை படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தமன்னாவுக்கு பாராட்டுக்களும் குவிந்தது. கடைசியாக தமிழில், 2019-ம் ஆண்டு வெளியான ஆக்ஷன் படத்தில் தமன்னா நடித்திருந்தார்.

தற்போது 4 வருட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் தமன்னா ஹோலி கொண்டாட்டத்தின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress tamanna holi celebration photos viral