ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தின் காலாவா பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடல் தற்போதுவரை 20 ஆயிரம் மில்லின் பார்வையாளர்களை கடந்து 68 ஆயிரம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படததில் நடித்து வருகிறார். மோகன்லால் , சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், சுனில், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
இதனிடையே சமீபத்தில் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வெளியானது. அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இந்த பாடலுக்கு தமன்னான நடனமாடியுள்ளார். இந்த பாடல் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், குழந்தைகள் மத்தியிலும் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் பாடல் குறித்த விமர்சனங்களும் ட்ரோல்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர், ஷகிராவின் வாக்கா வாக்கா பாடலை தமன்னாவின் காவாலா பாடல் நடனத்துடன் இணைத்து வீடியோவை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார். இந்த பதிவில், "இந்தியன் ஷகிரா செம்மா (அற்புதம்) என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள தமன்னா, ஒப்பீடு நன்றாக இருப்பதாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு பதிலளித்த ஒரு ரசிகர், "இந்தியன் ஷகிராவும் ஒரு சிறந்த பெயர் தான்!! என்று கூறியுள்ளார். மற்றொருவர் "யா, ஷகிராவின் 'திஸ் டைம் ஃபார் ஆப்ரிக்கா' பாடலுக்கு நீங்கள் நடனமாடுவது போல் இருக்கிறது நீங்கள் எங்கள் இந்தியன் ஷகிரா தான்" என்று கூறினார். "2023 இன் இந்த பாடல்! இன்னும் சில வருடங்கள் நினைவில் இருக்க வேண்டும்" "எனர்ஜெட்டிக் பாடல்" என்று ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ள நிலையில், தமன்னாவும் ஷகிராவும் நன்றாக இருக்கிறார்கள் என்று ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து தமன்னா சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார். மெஹர் ரமேஷ் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார். அனில் சுங்கராவின் ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தமன்னா நாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் சிரஞ்சீவியின் சகோதரியாக நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“