Advertisment

என் பெற்றோர் கூட இப்படி கேட்டதில்லை... ரசிகரின் கேள்வியால் தமன்னா வருத்தம்

விஜய் வர்மா தமன்னா இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தியதில் இருந்து பலவிதமாக சர்ச்சை கேள்விகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
Sep 06, 2023 12:31 IST
tamannah vijay varma

நடிகை தமன்னா - விஜய் வர்மா

நடிகை தமன்னா விஜய் வர்மாவுடனான தனது காதலை பற்றி வெளிப்படையாக பேசி வரும் நிலையில், சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும், அதற்கு அவர் கொடுத்த பதிலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, சமீபத்தில் நடிகர் விஜய் வர்மாவுடனான தனது காதலை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலாஜி திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

இதனிடையே விஜய் வர்மா தமன்னா இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தியதில் இருந்து பலவிதமாக சர்ச்சை கேள்விகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதேபோல் ரசிகர்கள் மற்றும் இணையதளவாசிகளிடம் இருந்து கடுமையாக விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தமன்னாவிடம்,  ​​ரசிகர், "உங்களுக்கு எப்போது திருமணம்? தமிழ் பையன்களுக்கு ஷாட் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளர். இதை கேட்டு கலங்கிப்போன தமன்னா "என் பெற்றோர் கூட என்னிடம் இதைக் கேட்கவில்லை" என்று பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து உங்களுக்கென ஒரு நல்ல பையன் கிடைத்தாரா என்று கேட்டபோது, “ஆம், இப்போது என் வாழ்க்கையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, தமன்னாவுடன் மாலத்தீவில் தனது விடுமுறையைப் கொண்டாடியது தொடர்பான பதிவில் விஜய் வர்மாவும், கிண்டல்களை எதிர்கொண்ட நிலையில், இதேபோன்ற வெறுக்கத்தக்க கேள்வியையும் எதிர்கொண்டார்.

மும்பை விமான நிலையத்தின் வருகைப் பிரிவில் இருந்து தனது காரை நோக்கி விஜய் வர்மா நடந்து சென்றபோது, புகைப்படக் கலைஞர் ஒருவர் அவரிடம், "மாலத்தீவு சென்றது தொடர்பான கேள்வி கேட்டது அவரை வருத்தமடையச் செய்தது, ஆனாலும் அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தாமல் நீங்கள் இப்படி கேட்டிருக்க கூடாது என்று பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 “தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamanna Bhatia #Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment