சமந்தாவுக்கு டஃப் கொடுக்கும் தமன்னா: ஓ சொல்றியா பாணியில் புதிய பாடல்

இசையமைப்பாளர் தமன் இசையில் உருவான இந்த பாடலை, ராம்ஜோக்கயா சாஸ்திரி எழுதியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகரான வருண் தேஜ் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் கனி. குத்துச்சண்டையை மையமாக வைத்து திரைக்கதை அமைச்சப்பட்டுள்ள இந்த படத்தில், சயீ மஞ்ச்ரேக்கர் நாயகியாக நடித்து வருகிறார். மேலும ஜெகபதி பாபு, உபேந்திரா, சுனில் ஷெட்டி, நவின் சந்திரா, நதியா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு இ்ந்த படம் வரும் மார்ச் 22-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சங்கராந்தி தினத்தை முன்னிட்டு இன்று இந்த படத்தின் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்தே என்று தொடங்கும் இந்த பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையில் உருவான இந்த பாடலை, ராம்ஜோக்கயா சாஸ்திரி எழுதியுள்ள நிலையில், ஹரிகா நாராயண் பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் இணைதளத்தில் வைராலாகி வருகிறது.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் சமந்தா ஆடியிருந்த ஊ சொல்றீயா மாமா என்ற பாடல் தற்போது வரை பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பி வரும் நிலையில், தற்போது இந்த பாடல்ம மற்றும் நடிகை சமந்தாவுக்கு போட்டியாக தமன்னா களத்தில் இறங்கியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actress tammanna dance in ghani telugu movie viral song

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express