அக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்

Actress Trisha : அக்ஷைய் குமாரின் பாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனுஷின் ஆடுகளம் படத்தை கைவிட்ட நடிகை த்ரிஷாவின் புகைப்படம் இணையத்தில் வைராகி வருகிறது.

கடந்த 2011-ம் தனுஷ் டாப்சி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்தின் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வெற்றிமாறன் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷ், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை டாப்சி தமிழில் அறிமுகமானர்.  ஆங்கிலோ இண்டியனாக நடித்திருந்த இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.   

ஆனால் இந்த படத்தில் டாப்சிக்கு பதிலாக முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகை த்ரிஷா. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்க தாமதமானது. அந்த சமயத்தில் த்ரிஷாவுக்கு பாலிவுட்டில் அக்ஷைய் குமார் நடிப்பில் வெளியான கட்டா மிட்டா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொள்ள முடிவு செய்த த்ரிஷா, ஆடுகளம் படத்தில் இருந்து விலகி கட்டா மிட்டா படத்தில் இணைந்தார்.

ஆனால் பெரும் எதிர்பார்ப்புடன் கட்டா மிட்டா படத்தில் இணைந்த த்ரிஷாவுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு பெரிதாக வேலை இல்லை. மேலும் இந்த படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் த்ரிஷாவின் நிலைமையை நினைத்து வருத்தப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதே உண்மை. மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு நடிக்காமலேயே இருந்திருக்கலாம் என்றார்கள்.

இந்நிலையில் ஆடுகளம் படத்தில் த்ரிஷா நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதில், தனுஷ், த்ரிஷா பார்த்த ரசிகர்கள், த்ரிஷா ஏன் இப்படி செய்தார், பாலிவுட்டை நம்பி ஏமார்ந்துவிட்டாரே, கட்டா மீட்டா படத்தில் நடித்ததற்கு பதிலாக அவர் ஆடுகளம் படத்திலேயே நடித்திருந்திருக்கலாம். நல்ல பட வாய்ப்பை இழந்துவிட்டார். ஆடுகளம், டாப்ஸிக்கு அடித்த அதிஷ்டம் என்று கூறி வருகின்றனர்.

மேலும் கட்டா மீட்டா படத்திற்கு பிறகு த்ரிஷா பாலிவுட் படங்களில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அனைத்து நடிகைகளுக்கும் பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அந்தவகையில், த்ரிஷாவின் ஆசையில் தவறு இல்லை. ஆனால் அவருக்கு கட்டா மிட்டா கை கொடுக்கவில்லை என்பதே நிதர்சமான உண்மை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actress trisha before act in adukalam movie viral photos

Next Story
”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express