அடையாளம் இல்லாத கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்; நடிகை த்ரிஷா ஆவேசம்!

மோசமான கருத்துக்களை தெரிவிப்பது தினசரி உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறதா உங்களையும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் நினைத்தால் வேதனையாக இருக்கிறது

மோசமான கருத்துக்களை தெரிவிப்பது தினசரி உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறதா உங்களையும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் நினைத்தால் வேதனையாக இருக்கிறது

author-image
WebDesk
New Update

தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நெட்டிசன்களுக்க பதிலடி கொடுக்கும் வகையில் ‘அடையாளமற்ற கோழைகளே’ என்று நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Trisha slams ‘toxic people’ for posting ‘nonsensical stuff’ on social media a day after Good Bad Ugly release: ‘Anonymous cowardice indeed’

பிரஷாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் த்ரிஷா. அதன்பிறகு சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய மௌனம்பேசியதே என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

குறிப்பாக விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் த்ரிஷா நடித்த படங்கள் அனைத்தும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இடையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான படங்களை தேர்வு செய்து நடித்து வந்த த்ரிஷா, விஜயுடன் நடித்த லியோ படத்திற்கு பிறகு, அடுத்தடுத்து முன்னணி நடிகர்களில் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாக அஜித்தின் விடா முயற்சி படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

Advertisment
Advertisements

தற்போது சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் நடித்து வரும் த்ரிஷா, நேற்று (ஏப்ரல் 10) வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 41 வயதாகும் த்ரிஷா தற்போதும் இளமையான தோற்றத்துடன், அழகில் கவனம் ஈர்த்து வருகிறார். ஆனாலும் அவரை பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவி வருவது தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தில் த்ரிஷா தேவையே இல்லை. அவர் ஏன் நடிக்க வேண்டும், அவர் ஏன் ப்ரமோஷன் செய்யவில்லை, என்று தொடர்ச்சியாக த்ரிஷா குறித்து நெகடீவ் கருத்துக்கள் வெளியாக தொடங்கியுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலடி கொடுத்துள்ள த்ரிஷா, டாக்சிக்கான மக்களே நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்? நிம்மதியாக தூங்குகிறீர்களா? சமூகவலைதளங்களில் இருந்து மற்றவர்கள் குறித்து மோசமான கருத்துக்களை தெரிவிப்பது தினசரி உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறதா?

publive-image

உங்களையும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் நினைத்தால் வேதனையாக இருக்கிறது. பெயர் இல்லாத, அடையாளம் இல்லாத நீங்கள் நிச்சயமாக கோழைகள் தான். உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Trisha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: