Advertisment

தமன்னா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா... குட்டிக் குழந்தையில் செம்ம க்யூட் யார்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான தமன்னா, த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Trisha Keerthi Tamannah

நடிகைகளின் சிறுவயது புகைப்படம்

சமூகவலைதளங்களில் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய காலக்கட்டத்தில் பிரபலங்கள் பலரும் தங்களது புகைப்படங்களை தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் பிரபலங்களின் தனிப்பட்ட விபரங்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும் நெட்டிசன்களும் அவர்கள் வெளியிடும் பதிவுகளை வைரலாக்கி வருகின்றனர்.

Advertisment

குறிப்பாக சினிமா பிரபலங்கள் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்கள், எப்படி இருந்தார்கள் என்பது குறித்த தகவலும் அவர்களின் சிறுவயது புகைப்படங்களையும் பார்க்க நெட்டிசன்கள் பெரும் ஆர்வத்துடன் இணையத்தில் குவிந்து வருகிறது. இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவ்வப்போது சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது 3 முன்னணி நடிகைகளின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமன்னா

Tamannah

ரவி கிருஷ்ணா நாயகனாக நடித்த கேடி என்ற படத்தில் நெகடீவ் கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா, அடுத்து கல்லூரி என்ற படத்தில் பாசிட்டீவ் ரோலில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். வியாபாரி என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த தமன்னா தொடர்ந்து விஜய், அஜித் சூர்யா விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் மூலம் தமன்னா இந்தியளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். அவரின் சிறுவது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

த்ரிஷா

Trisha

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானி பின்னர் அமீரின் மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தவர் த்ரிஷா தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள த்ரிஷா தற்போது விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 28-ந் தேதி வெளியாக உள்ளது. தற்போது த்ரிஷாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ்

Keerthi Suresh

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முன்னாள் நடிகை மேனகாவின் மகளாக இவர், சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து விஜய் விக்ரம் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்த கீர்த்தி நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சாணி காகிதம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி சுரேஷ் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Keerthy Suresh Trisha Tamanna Bhatia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment