/indian-express-tamil/media/media_files/HlF6sHBlv7YKE89UxXhv.jpg)
நடிகை த்ரிஷா
/indian-express-tamil/media/media_files/tNIY9ObQLni9VvP9Yjeb.jpg)
1999-ம் ஆண்டு பிரஷாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தின் நாயகியின் தோழியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. அதனைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/XS6ib5o5ZP4CzMreOcvt.jpg)
மௌனம்பேசியதே தொடர்ந்து விக்ரமின் சாமி படத்தில் நடித்த த்ரிஷாவுக்கு இந்த இரு படங்களுமே பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு கமல்ஹாசன் தொடங்கி, விஜய் அஜித் சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/3gDX4g6vIWc4K7M8BUnN.jpg)
விஜயுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்த த்ரிஷா 4-வது முறையாக விஜயுடன் லியோப படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
/indian-express-tamil/media/media_files/ez1e0V395x1sEXrO89dt.jpg)
தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்து வரும் த்ரிஷா மலையாளத்தில் மோகன் லாலுடன் ராம் படத்தில் நடித்து வருகிறார். தமிழில், தி ரோடு உள்ளிட்ட படங்களில் த்ரிஷா நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/ivziqwPl2J4IdjOZIKcD.jpg)
சமீபத்தில் வெளியான தி ரோடு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று த்ரிஷாவுக்கு பாராட்டுக்களையும் பெற்று தந்தது. வரலாற்று திரைப்படமாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவி தேவியாக நடித்து பாராட்டுக்களை பெற்றவர் த்ரிஷா.
/indian-express-tamil/media/media_files/3Y0FoRwczXyPNe65p9fL.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் த்ரிஷா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் த்ரிஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/aPwkoDmRtBUfpHCvSqvY.jpg)
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.