தனது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாக கூறி தனது பக்கத்து வீட்டுக்காரர் மீது சிவில் வழக்கு தொடர்ந்த நடிகை த்ரிஷா தற்போது வழக்கில் சமரசம் செய்துகொண்தால், வழக்கு தாக்கல் செய்யும்போது செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, சென்னை செனடாப் ரோடு இரண்டாவது தெருவில் உள்ள தனது வீட்டின் கட்டிடத்தை பாதிக்கும் வகையில் பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பன் பொதுவாக காம்பவுண்ட் சுவற்றை இடித்துவிட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காம்பவுண்ட் சுவற்றை இடிக்க கூடாது என்று உத்தரவிட்டது. இதனிடையே தற்போது நடிகை த்ரிஷா பக்கத்துவீட்டுக்காரர் மெய்யப்பனிடம் சமரசம் செய்துகொண்டுள்ளார். இதில் மெய்யப்பன், அவரது மனைவி காவேரி மற்றும் அவர்களது வக்கீல் ஆகியோரால் கையொப்பமிடப்பட்ட கூட்டு சமரசக் குறிப்பைப் பதிவுசெய்த பிறகு, வழக்கை முடித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றக் கட்டணத்தை திருப்பித் தருமாறு உயர் நீதிமன்றப் பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ் குமார் சுவற்றை அடிக்க, இடைக்காலத் தடை உத்தரவு பட்டியலிடப்பட்டபோது, த்ரிஷாவின் வீட்டிற்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் இடையே பொதுவான சுவர் இருப்பதையும், இரண்டு கட்டிடங்களும் சொத்துக்களின் முன்னாள் உரிமையாளர்களால் கட்டப்பட்டதையும் நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொண்டார்.
நடிகை த்ரிஷா, தனது சொத்தை 2005-ல் வாங்கிய நிலையில், அவரது பக்கத்துவீட்டுக்காரர் 2023-ல் அவர்களின் சொத்தை வாங்கி, சொத்தை மீண்டும் புதுப்பிப்பதற்காக அவர்களின் கட்டிடத்தை இடிக்கத் தொடங்கினர். இதற்கு பொதுவான சுவர் ஒரு சவாலாக உள்ளது, ஏனெனில் இந்த சுவற்றை இடித்தால், த்ரிஷாவின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன, என்று தெரிவித்திருந்தார்.
ஜனவரி 24 அன்று நீதிபதி என். சதீஷ் குமார் முன் அவரது இடைக்காலத் தடை உத்தரவு பட்டியலிடப்பட்டபோது, நடிகரின் வீட்டிற்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் இடையே பொதுவான சுவர் இருப்பதையும், இரண்டு கட்டிடங்களும் சொத்துக்களின் முன்னாள் உரிமையாளர்களால் கட்டப்பட்டதையும் நீதிபதி கவனித்தார்.
த்ரிஷா தனது சொத்தை 2005 இல் வாங்கிய நிலையில், அவரது அயலவர்கள் 2023 இல் அவர்களின் சொத்தை வாங்கி, சொத்தை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்காக அவர்களின் கட்டிடத்தை இடிக்கத் தொடங்கினர். பொதுவான சுவர் ஒரு சவாலாக உள்ளது, ஏனெனில் வாதியின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்று கூறியிருந்தார்.
ஒரு கட்டத்தில் இடைக்கால தடை உத்தரவு பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், த்ரிஷாவின் தாயும் அவரது அண்டை வீட்டாரும் மார்ச் 21, 2024 அன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது சமரசத்தில் முடிந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.