/indian-express-tamil/media/media_files/2025/09/18/urvasi-actress-2025-09-18-15-56-38.jpg)
தமிழ் சினிமாவில் நேரடியாக நாயகியாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை ஒருவர் கமல்ஹாசன் உட்பட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகள் மட்டும் இல்லாமல், வெளிமாநில குறிப்பாக, கேரளாவை சேர்ந்த பல நடிகைகள் முத்திரை பதித்துள்ளனர். அம்பிகா - ராதா தொடங்கி பல சகோதரிகளும் இந்த வரிசையில் இடம் பிடித்துள்ளனர். அந்த வரிசையில் வந்த 3 சகோதரிகள் தான் ஊர்வசி, கல்பனா, கலாரஞ்சனி சகோதரிகள். இதில் ஊர்வசி பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதேபோல் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சின்ன வீடு படத்தில் கல்பான ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில், 1981-ம் ஆண்டு வெளியான அன்றுமுதல் இன்றுவரை என்ற படத்தில் நடித்திருந்தார், கல்பனா, கலாரஞ்சனி இருவரும் தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். ஆனால் ஊர்வசி தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஆனால் இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
காமெடி, கண்ணீர், கோபம், பொறாமை என எந்தவொரு கேரக்டராக இருந்தாலும், அதை இயல்பாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்த நடிகை ஊர்வசி, எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும் கேரக்டர்களை திரையில் கொடுத்துள்ளார். கமல்ஹாசன் போன்ற பல பிரபலங்கள் இவரை 'நடிப்பின் அரக்கி' (நடிப்பின் ராட்சசி) என்று குறிப்பிடுகின்றனர். அந்த அளவிற்கு பெயர் பெற்ற ஊர்வசி, மலையாளத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/11/urvasi-2025-08-11-13-10-33.jpg)
இந்தபுகைப்படத்தில்,நடிகர் கே.பி.உம்மருடன் இணைந்து ஊர்வசி இருக்கிறார். இது அவர் நடித்த இரண்டாவது திரைப்படமான கதிர்மண்டபம் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். ஊர்வசி, தனது 8வது வயதில் விடரும் மொட்டுக்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதே படத்தில்தான் அவரது சகோதரியும் நடிகையுமான கல்பனாவும் அறிமுகமானார். பின்னர் 1979-ல் வெளியான கதிர்மண்டபம் படத்தில், நடிகை ஜெயபாரதியின் மகளாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
ஊர்வசி தனது 13-வது வயதில் தொடரும் உறவு (1983) படத்தில் முதல்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்தத் திரைப்படம் மூன்று ஆண்டுகள் கழித்து, 1986-ல் தான் வெளியானது. ஊர்வசி கதாநாயகியாக முதலில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. அதன் பிறகு, மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் வரை அவரது நடிப்புப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us