தமிழ் சினிமாவில் வில்லியாக நடித்து பிரபலமான வடிவுக்காரசி தற்போது பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், தான் அறிமுகமான படத்தில் கமல்ஹாசனையே வியக்க வைக்கும் அளவுக்கு அவருக்கே டஃப் கொடுத்து நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் பாரதிராஜா. 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர், அதன்பிறகு தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். 16 வயதினிலே படத்தில் நாயகனாக நடித்த கமல்ஹாசன் நடிப்பில் 1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் தான் சிகப்பு ரோஜாக்கள். சைகோ த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஸ்ரீதேவி, கவுண்டமணி, உள்ளிட்ட சிலர் மட்டுமே நடித்திருந்தனர்.
இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.கமல்ஹாசன் ஸ்ரீதேவி மட்டுமே இந்த படத்தில் முக்கிய கேரக்டர்கள் என்றாலும், கவுண்டமணி, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் நடித்திருப்பார்கள். அந்த வகையில், கமல்ஹாசன் ஆபீஸ்க்கு இன்டர்வியூக்காக வருபவராக நடித்திருந்தவர் தான் வடிவுக்காரசி. இவர் ஒரு காட்சி தான் நடித்திருந்தார் என்றாலும் அந்த காட்சி பலராலும் மறக்க முடியாத ஒரு காட்சியாக அமைந்திருக்கும்.
இந்த காட்சி படமாக்கப்பட்டபோது, இயக்குனர் பாரதிராஜா தனது உதவியாளர் பாக்யராஜூவிடம், அந்த பொண்ணுக்கு எப்படி டைலாக் பேச வேண்டும் என்று சொல்லிக்கொடு. முதல் படம் எதும் பதட்டமாக இருக்க போகுது என்று கூறியுள்ளார். இதனையடுத்து பாக்யராஜ் வடிவுக்காரசியிடம் பேசும்போது, அவர் கான்ஃபிடன்டாக நடிக்க தயாராக இருந்ததை தெரிந்துகொண்டு அவரிடம் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கியபோது, கமல்ஹாசன் முன்பு வடிவுக்கரசி சாதாரணமாக நடித்து முடித்துள்ளார்.
இந்த காட்சி முடியும்போது, கமல்ஹாசன் சந்திரா என்று பெயர் சொல்லியிருப்பார். அப்போது வடிவுக்கரசி, சாரி சார் என் பெயர் சித்ரா என்று பேப்பரில் இல்லாத டைலாக்கை பேசி ஸ்பாட்டில் பதிலடி கொடுத்து கமல்ஹாசனையே வியக்க வைத்துள்ளார். இதை பார்த்து ஷாக்கான கமல்ஹாசன், ஓ சாரி என்று சொல்லி சிகரெட் என்று சொல்ல, அதையும் வடிவுக்கரசி வாங்கிக்கொண்டுள்ளார். இந்த காட்சி பேப்பரில் இல்லை என்றாலும் படத்தில் அப்படியே வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“