Advertisment

90 வயதில் பரதநாட்டியம்: பிரமிக்க வைத்த வைஜெயந்தி மாலா வீடியோ

பார்த்திபன் கனவு, பாக்தாத் திருடன், இரும்புத்திரை, தேனிலவு உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், கடைசியாக தமிழில், 1963-ம் ஆண்டு வெளியான சித்தூர் ராணி பத்மினி என்ற படத்தில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Vaijayanthi Mala

வைஜெயந்தி மாலா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை வைஜெயந்தி மாலா தனது 90 வயதில் பரதநாட்டியம் ஆடிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

1949-ம் ஆண்டு ஏ.வி.எம்.நிறுவனம் தயாரிப்பில் வெளியான வாழ்க்கை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் வைஜெயந்தி மாலா. அதன்பிறகு தெலுங்கு, கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், மீண்டும், 1959-ம் ஆண்டு வெளியான அதிசய பெண் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

அதன்பிறகு பார்த்திபன் கனவு, பாக்தாத் திருடன், இரும்புத்திரை, தேனிலவு உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், கடைசியாக தமிழில், 1963-ம் ஆண்டு வெளியான சித்தூர் ராணி பத்மினி என்ற படத்தில் நடித்திருந்தார். வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில், பத்மினியுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.

சினிமாவை தாண்டி அரசியலிலும் வெற்றிக்கொடியை நாட்டியுள்ள வைஜெயந்தி மாலா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பியாக இருந்துள்ளார். அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான இவருக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில், 90 வயதில் பரதநாட்டியம் ஆடிய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் நடிகை வைஜெயந்தி மாலா நடனமாடியுள்ளார். 90 வயதில் அவர் ஆடிய பரதநாட்டியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment