நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி தயாரித்து நாயகியாக நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள 'சிவராத்திரி தூக்கம் ஏது' என்ற பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா வழக்கு தொடர்ந்த நிலையில், நான் அவர் வீட்டு மருமகள் ஆக வேண்டியது என்று வனிதா விஜயகுமார் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் வைரல் நடிகையாக வலம் வரும் வனிதா விஜயகுமார், எந்த கருத்துக்காக இருந்தாலும் தைரியமாக பேசி வருகிறார், அதனால் ஏற்படும் ட்ரோல்கள், மற்றும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்து வருகிறார், அதேபோல், சினிமாவில் முன்பைவிட பிஸியாக வலம் வரும் அவர், தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது தனது மகள் ஜோவிகாவின் தயாரிப்பில், மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.
இந்த படத்தில் 'சிவராத்திரி தூக்கம் ஏது' என்ற பாடல் வெளியானபோது இளையராஜாவுடன் வனிதா ஜோவிகா இருக்கும் புகைப்படத்தின் மூலம் பாடல் வெளியிடுவதை அறிவித்திருந்தார். வனிதா. ஆனால் தற்போது படம் வெளியாகியுள்ள நிலையில், இந்த பாடலுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'சிவராத்திரி தூக்கம் ஏது என்ற பாடல், இந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இளையராஜா வழக்கு குறித்து பேசிய நடிகை வனிதா விஜயகுமார், இளையராஜா வீட்டில் நான் ஒரு பொண்ணு மாதிரி. அவரிடம் தனிப்பட்ட முறையில் இந்த பாடலை பயன்படுத்துவது குறித்து பேசிவிட்டேன். இந்த பாடலை எக்கோ ரெக்கார்டிங் கம்பெனியில் இருந்துதான் சோனி மியூசிக் வாங்கினார்கள். வேண்டுமென்றே அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தவறான ஒன்று. நான் நேரில் சென்று, அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, என் பொண்ணுடன் அவர் காலில் விழுந்துள்ளேன். அவரின் மகள் பவதாரணி எனக்கு உடன்பிறவா சகோதரி. என் சொந்த அப்பாவையே கோர்ட் கேஸ் என்று சந்தித்துவிட்டேன். ஆனால் அவரை நான் தெய்வமாகத்தான் மதிக்கிறேன்.
Advertisment
Advertisements
அந்த குடும்பத்தில் ஒரு சம்பவம் நடந்தபோது அவர் பையன் நீ என்னை லவ் பண்றியா எங்க அப்பாவை லவ் பண்றீயா என்று கேட்டான் நான் உங்க அப்பாவைத்தான் லவ் பண்றேன் என்று சொன்னேன். அவரது வீட்டில் ஜீவா அம்மாவிடம் (இளையராஜா மனைவி) லாக்கர் சாவி வாங்கி அங்கிருந்து நகைகள் எடுத்து அம்மனுக்கு பூஜை செய்திருக்கிறேன். அந்த குடும்பத்திற்கு நான் மருமகளாக போக வேண்டியவள் இதற்கு மேல் நான் எதுவும் சொல்வதற்கு இல்லை என்று கூறியுள்ளார்.