மதம் மாறிய வனிதா... காரணம் இதுதானா?

Tamil Cinema Update : சமுக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Tamil Cinema Update : சமுக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
மதம் மாறிய வனிதா... காரணம் இதுதானா?

Tamil Actress Vanitha To Follow Buddhism : தமிழ் சினிமாவின் வைரல் நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். 1995-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆன ஊரிரு படங்களில் நடித்த உடன் சினமாவில் இருந்து விலகினார். இதன்பிறகு இவரைப்பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

Advertisment

அந்த நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் வாய்ப்பு கிடைத்தது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் வனிதா இறுதிவரை சென்று மீண்டும் சினமாவில தனக்காக ரீ-எண்ட்ரியை உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து தற்போது வனிதா விஜயகுமாருக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியுள்ளது.

இதில் தற்போது பிரசாந்தின் 'அந்தகன்', 'சிவப்பு மனிதர்கள்', 'வாசுவின் கர்ப்பினிகள்', வசந்தபாலனின் 'அநீதி', 'கொடூரன்', 'காத்து', 'கென்னி', ' தில் இருந்து போராடு' மற்றும் 'பிக்அப் டிராப்'. உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா கடந்த சில நாட்களுக்கு மன்பு அதில் இருந்து வெளியேறினார்.

சமுக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு காரின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், மகிழ்ச்சியான அமைதியான வாழ்க்கைக்காக தான் "பல வருடங்களாக புத்த மதத்தை பின்பற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

ஆனால் அவர் கடந்த 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தபோது கிறிஸ்தவ முறையைப்படி திருமணம் செய்துகொண்டார். அதே போன்று ஆடைகளை அணிந்தார். இதனை குறிப்பிட்டு தற்போது நெட்டிசன்கள் பலரும் கருத்துதெரிவித்து வரும் நிலையில். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vanitha Vijayakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: