குத்து பாடல் போஸ்… சமந்தாவுக்கு டஃப் கொடுக்கும் வனிதா விஜயகுமார்!

Tamil Cinema Update: சர்ச்சைகளை கண்டுகொள்ளாத வனிதா தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்

Vanitha Vijayakumar Update In Tamil : தமிழ் சினிமாவில் வைரல் நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவரின் திருமணம் உள்ளிட்ட பல சர்ச்சைகள் இவரை பின்தொடர்ந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தால் தனது வேலைகளை சரியாக செய்து முன்னேறி வருகிறார்.

சினிமாவில் வாய்ப்பு குறைந்த இவர், சின்னத்திரையில் களமிறங்கினார். அங்கு குக் வத் கோமாளியில் சாம்பியன் பட்டம் பெற்றதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். விஜய் டிவியின் பிக்பாஸட இவருக்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்று சொல்லாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் கேரக்டரை பார்த்து அவருக்கு ஆதரவு அளித்து வந்தனர்.  

அதன்பிறகு வெளியில் வந்த அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டு அடுத்த நாளே பிரிந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத வனிதா தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், பிரஷாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் டிராப் உள்ளிடட சில படங்களில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில், தற்போது வனிதா காத்து என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடலுக்காக வேடமிட்டு மேக்கப்புடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

அந்த பாடல் பட்டிதொட்டி எங்கிலும் வைரலாக பரவிய நிலையில், சமந்தாவுக்கு போட்டியாக வனிதா பாடல் வைரல் ஆகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actress vanitha vijayakumar dance in kaathu movie

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com