நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது முன்னாள் காதலரும், பிக்பாஸ் பிரபலமுமான ராபர்ட் மாஸ்டருக்கு ப்ரபோஸ் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு வைரலாக பரவிய நிலையில், வனிதா மீண்டும் திருமணம் செய்ய உள்ளாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது இந்த புகைப்படம் எதற்காக வெளியிடப்பட்டது என்பது குறித்து வனிதா விஜயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisment
விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா விஜயகுமார், இளம் வயதிலேயே நடிக்க தொடங்கினார். முதல் படமே விஜய்க்கு ஜோடி என்றாலும், அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் சினிமாவில் இருந்து விலகிய வனிதா, சில வருட இடைவெளிக்கு பிறகு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மீண்டும் பிரபலமானார்.
வனிதா விஜயகுமார் மட்டுமல்லாமல், அவரது மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். தற்போது சினிமா மற்றும் டிவி சீரியல்கள் என பிஸியாக இருக்கும் வனிதா விஜயகுமார், 3 3 முறை திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமணங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டரை கூட காதலித்து வந்தார், ஆனால், அவர்களது காதல் நீடிக்கவில்லை.
இந்நிலையில் வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டரின் கையை பிடித்துக்கொண்டு கீழே உட்கார்ந்து காதலை வெளிப்படுத்தும் காட்சி போல இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் ஒரு புகைப்படம் வெளியிட்டு, அக்டோபர் 5 இந்த தேதியை சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும், தரையில பேசுனதெல்லாம், திரையில வருது அக்காவ் என்று ஒரு ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், வனிதா விஜயகுமாருக்கும் ராபர்ட் மஸ்டருக்கும் திருமணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில், சிலர், இது படத்தின் தகவலாகவோ அல்லது பாடல் காட்சியின் புகைப்படமாகவோகூட இருக்கலாம், புரொமோஷனாகவும் இருக்கலாம் என கமெண்ட் செய்திருந்தனர். இதனிடையே அக்டோபர் 5-ந் தேதியான இன்று அதற்கு விடை கிடைத்துள்ளது,
வனிதா விஜயகுமார் தான் புதிதாய தயாரித்து இயக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தின் ப்ரமோஷனக்காகத்தான் இவ்வாறு செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இந்த படத்தின் ப்ரமோ வீடியோவை வனிதா தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
எனது வரவிருக்கும் திரைப்படத்தின் விளம்பர வீடியோவைப் பகிர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகள் அனைவரின் அசைக்க முடியாத ஆதரவு இல்லாமல் இந்த தருணம் சாத்தியமில்லை. இந்தப் பயணத்தில் என்னுடன் நின்றதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீங்களும் வீடியோவைப் பார்க்க விரும்புவீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“