/tamil-ie/media/media_files/uploads/2022/12/Vanitha-Vijayakumar-1.jpg)
வனிதா விஜயகுமார்
ஜீ தமிழின் முக்கிய சீரியலிகளில் ஒன்றாக மாரி சீரியலில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழின் முக்கிய சீரியலான 'மாரி' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இதனிடையே இந்த சீரியலின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் சீரியல் குழு ஒரு புதிய கேரக்டரில் நடிக்க நடிகை வனிதாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1995-ம் ஆண்டு நம்பிராஜன் இயக்கிய சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமான வனிதா மாணிக்கம் (1996) படத்தில் ராஜ்கிரணுடன் நடித்தார். மலையாளத் திரைப்படமான ஹிட்லர் பிரதர்ஸ் (1997) நடித்த வனிதாவுக்கு அதன்பிறகு சரியான வாய்ப்புகள் இல்லை என்பதால்,,தனது சகோதரி ப்ரீதாவின் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார்.
மேலும் காக்கை சிறகினிலே (2000) திரைப்படத்தின் போது பி. வாசுவிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். ஆகாஷுடனான முதல் திருமணத்திற்குப் பிறகு, வனிதா திரையுலகில் இருந்து விலகினார். அதன்பிறகு 2019 ஆம் ஆண்டில், தமிழ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் 3-ல் ரீ-என்ட்ரி ஆன வசிதா, குக் வித் கோமாளி என்ற தமிழ் சமையல் நிகழ்ச்சியின் சீசன் 1ல் சாம்பியன் பட்டம் வென்றார். பின்னர் அவர் பிக் பாஸ் அல்டிமேட் (சீசன் 1) என்ற ஸ்பின்-ஆஃப் பதிப்பு நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.
இதனிடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்ளில் பங்கேற்றுள்ள வனிதாபுது புது அர்த்தங்கள் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மாரி சீரியலில் புது கேரக்டரில் நடிக்க உள்ளார்.
இது குறித்து பேசிய வனிதா விஜய்குமார், “மாரி போன்ற அற்புதமான சீரியலில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சோனா ஹைடன், சிவ சுப்ரமணியன், அபிதா, டெல்லி கணேஷ், சாய்ரா பானு போன்ற சிறந்த நடிகர்களுடன் நடிக்க ஆவலாக உள்ள எனக்கு இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் வி.சதாசிவம் மற்றும் வாசுதேவன் சார் அவர்களுக்கு நன்றி. நிச்சயமாக, நான் சீரியலில் எனது சிறந்த நடிப்பை கொடுப்பேன் மற்றும் தொடர்ந்து ஆதரவளியுங்கள் என்று கூறியுள்ளார்.
மாரி சீரியலில் ஆஷிகா படுகோன், ஆதர்ஷ், சோனா ஹைடன், சிவ சுப்ரமணியன், அபிதா மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த சீரியலில், சாய்ரா பானு, ஷப்னம், ஷியாம், மீரா கிருஷ்ணா, முகேஷ் கண்ணா உள்ளிட்ட ஒரு குழும நடிகர்களும் உள்ளனர். ,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.