தமிழ் சினிமாவின் வைரல் நாயகியாக வலம் வரும் வனிதா விஜயகுமார் தற்போது யூனிவர்சில் இருப்பதாகவும், அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதியின் மகளாக தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை வனிதா விஜயகுமார். இன்றைக்கு வனிதா என்றால் வைரல், வைரல் என்றால் வனிதா என்கிற அளவுக்கு அவரைப் பற்றிய செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் எதுவானாலும் வைரலாகத் தவறியதே இல்லை.
திருமண வாழ்க்கையில் பிரிவுகளைச் சந்தித்த வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனது அதிரடியான இயல்பால் பேசப்பட்டார். அதன் பிறகு நிறைய டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இப்போது தனியாக நிறைய தொழில்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
அதே சமயம் வனிதா எது செய்தாலும் என்ன சொன்னாலும் இது இணையத்தில் வைரலாக பரவி வருவது சமீப காலமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வனிதா யூனிவர்சில் இருப்பதாகவும், இது குறித்த விரைவில் அப்டேட் வரும் என்று அவரின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள ஒரு வீடியே பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்தி வாசிப்பது போல் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் வனிதா யூனிவர்சில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். வனிதா குறித்து பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம் என சிலரிடம் கேட்டுள்ளனர். இதில் பலரும் வனிதாவுக்கு சப்போட் செய்வோம் என்று கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பான அப்டேட்களுக்கு இணைந்திருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தலையும் புரியமா வாலும் புரியாம என்ன இது என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil