New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Vanithas.jpg)
Tamil CInema Update : சின்னத்திரையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமான வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்
Tamil Actress Vanitha Vijayakumar New Getup Update : தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக சந்திரலோகா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான வனிதா அதன்பிறகு சில படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய அவர், ஒரு கட்டத்தில் திருமணம் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் திரைத்துறையில் ரீ- எண்ட்ரி கொடுத்தார்.
சின்னத்திரையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமான வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக அவருக்கு படவாய்ப்பு குவிந்து வரும நிலையில், பிரஷாந்தின் அந்தகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, தனியாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் பேஷன் டிசைன், மேக்கப் ஆர்டிஸ்ட் என பன்முக திறமைகளை வெளிகாட்டி வரும் வனிதா அவ்வப்போது சமூகவலைதளங்களில் புகைப்படங்களை வெளிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரின் பதிவுகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வரும் வனிமா தற்போது ஒரு புது ப்ராஜெக்ட் தொடங்கி இருப்பதாக கூறி புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார் வனிதா.அதில் அவர் ஷார்ட் ஆன முடி, கோட் அணிந்து கார்ப்பரேட் பெண் போல மாறி இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் வனிதாவா இது என்று பலரும் ஆச்சர்யப்பட்டு இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார். ஆனாலும் இதுவும் உங்களுக்கு நன்றாகத்தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து கூறிவரும் நிலையில், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.