புடவை கட்டியபடி புல்லட் ஓட்டும் வனிதா: அட, இது எப்போ?

Tamil Cinema Update : நான் விஜயகுமார் பொண்ணு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளேன். கடந்த வருடம் மட்டும் 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன்.

Actress Vanitha Vijayakumar New Movie Update : தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நாயகியாக வலம் வருபவர் வனதா விஜயகுமார். திருமணம் தொடர்பான சர்ச்சைகள் மூலம் இணையத்தில் வைரலாகி வந்த இவர், சின்னத்திரையின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் மற்றும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் மூலம், ரசிகர்கள் மத்தியில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

குக் வித் கோமாளி சீசன் 1-ல் சாம்பியன் பட்டம் பெற்ற வனிதா அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் மீண்டும் குவியத்தொடங்கியது. முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் அறிமுகமானாலும் அடுத்த சில படங்களில் நடித்து விட்டு திருமண வாழ்க்கையை தொடங்கினார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள வனிதா தற்போது, பிரஷாந்தின் அந்தகன், பவர்ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் உள்ளிட்ட சில படங்கில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்து முடித்துள்ள படம் தில்லு இருந்தா போராடு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய வனிதா, நான் முட்டாள் தனம் செய்துவிட்டேன். சிறு வயதிலேயே சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து அதில் இருந்து விலகிவிட்டேன். ஆனால் இப்போது ஆண்டவன் திரும்பவும் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் புடவை கட்டிக்கொண்டு புல்லட்டில் வருவது போலவும், அதை எட்டி உதைப்பது போலவும் காட்சிகள் உள்ளது.

உண்மையாகவே இந்த காட்சியில் நடிக்கும்போது எனது அப்பாவின் ஞாபகம் வந்தது. அவரை நினைத்து நான் பெருமை படுகிறேன். நான் விஜயகுமார் பொண்ணு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளேன். கடந்த வருடம் மட்டும் 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் வலைதளங்களில் தீவிரமான இயங்கி வரும் எனக்கு வைரல் ஸ்டார் என்ற பட்டம்கொடுத்த மீடியாவுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actress vanitha vijayakumar new movie update in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com