பெண்கள் புகைப்பிடிப்பதே இப்போது கிடைத்துள்ள முன்னேற்றம் தான் என்று சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் தற்போது அதிகமாக படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் நடிகை வனிதா விஜயகுமார், தனது 2-வது இன்னிங்சை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பது, யூடியூப் சேனலில் வீடியோ, ரியாலிட்டி ஷோ என அவ்வப்போது திறமையை நிரூபித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் குடிப்பழக்கத்தை கைவிடுவமாறு தனது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது தொடர்பாக பத்திரியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த வனிதா விஜயகுமார், எல்லோருமே குடிக்காதீர்கள் புகைபிடிக்காதீர்கள் என்று சொல்வார்கள்.
ஆனால் சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு. இரண்டையும் ஒன்றாக இணைக்காதீர்கள். நடிகர்கள் படங்களில் புகைபிடிப்பதை வரவேற்கிறோம். ஆனால் அதையே நடிகைள் செய்தால் அதனை சர்ச்சையாக்குகிறீர்கள். இந்த விஷயத்தை நான் முன்னேற்றமாகவே பார்க்கிறேன். காலம் மாறுகிறது. இதையும் வரவேற்க வேண்டும். ஆனால் அவர்கள் நிஜத்திலும் அதனை செய்வார்கள் என்று கூற முடியாது.
அவர்கள் அவ்வாறு செய்தால் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம், நான் புகைப்பிடிப்பது போல் நடித்தது படத்தின் தேவை. அதற்காக நான் அப்படித்தான் என்று என் தனிப்பட்ட விஷயத்தை சர்ச்சையாக்க தேவையில்லை என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். வனிதா புகைபிடிப்பது போன்ற புகைப்படங்கள் அண்மையில் சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil