கைதி அர்ஜூன் தாஸ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள அநீதி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வனிதா விஜயகுமார் இந்த படத்தில் நடித்தது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
1995-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான வனிதா விஜயகுமார் அடுத்து ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார். திருமணத்திற்கு பின் பங்களில் நடிப்பதில் இருந்து விலகிய வனிதா, பல வருட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமான வனிதாவுக்கு தற்போது பட வாய்ப்பு குவிந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பல படங்களில் நடித்து வரும் வனிதா அர்ஜூன் தாஸ் நடித்து வரும் அநீதி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பெருமான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்லும் கைதி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான அர்ஜூன் தான் தற்போது மீண்டும் நாயகன் அவதாரம் எடுத்துள்ள படம் அநீதி.
வெயில், அங்காடித்தெரு, அரவான் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த வசந்தபாலன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், நான் ஒரு சில படங்களில் நடித்து சினிமாவை விட்டு விலகிவிட்டேன். இப்போது மீண்டும் ரீ-என்டரியில் பல படங்களில் நடித்து வருகின்றனர். இதில் அநீதி படம் முதலில் வெளியாக உள்ளது.
வசந்த பாலன் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. வசந்தபாலன் சார் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொன்னார்கள். உடனடியாக அவரும் என்னிடம் பேசினார். நான் வசந்தபாலன் பேசுகிறேன் மேடம். நான் ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். நானே தயாரிக்கிறேன் பட்ஜெட் படம் தான். இந்த படத்தின் கதையை எழுதும்போது ஒரு கேரக்டரை உங்களை நினைத்துதான் எழுதினேன்.
நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது என்று சொன்னார். இதை கேட்டு நான் அடுத்து என்ன கேரக்டர், என்ன சம்பளம் என்று எதையும் கேட்காமல் கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். இந்த படத்தில் வில்லனுக்னே (அர்ஜூன் தாஸ்) நான் வில்லனாக நடித்திருக்கிறேன். இது எனக்கு பெருமையாக நினைக்கிறேன் என்று வனிதா கூறியுள்ளார்.
அதேபோல் வனிதா பேசிக்கொண்டிருக்கும்போதே நடுவில் பேசிய நிகில் என்ற ஒருவர் சமீபத்தில் மோகன் சார் படம் நைட் 10 மணிக்கு போன் செய்து ஷூட்டிங் வர முடியுமா என்று வனிதாவிடம் கேட்டோம். அதற்கு அவர் இப்போது நைட் ஆகிவிட்டது. ஃப்ளைட் ட்ரெய்ன் எதுவும் இல்லை காலையில் வருகிறேன் என்று சொன்னார். அப்போது சம்பளம் குறித்து கேட்டபோது தயாரிப்பாளர் எது கொடுத்தாலும் ஓகே, என்றும் தங்குவதற்கு என்று கேட்டபோது தயாரிப்பாளர் எங்கு சொல்கிறாரோ அங்கு தங்குகிறேன் என்று வனிதா கூறியதாக தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“