/indian-express-tamil/media/media_files/2025/05/27/TK3BBlh5HwADZDeRi02y.jpg)
தனது பெயருக்கு பின்னால் விஜயகுமார் என்று தந்தையின் பெயர் இருப்பது போல், தனது மகளின் பெயருக்கு பின்னால் இருக்கும் விஜயகுமார் என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்து நடிகை வனிதா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார் அடுத்து, ராஜ்கிரனுக்கு ஜோடியாக மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு, நடிப்பில் இருந்து விலகிய அவர், ஒரு கட்டத்தில் திருமணத்தின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். விஜய் டிவியின், பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல பட வாய்ப்புகளை பெற்றிருந்த வனிதா, சமீபத்தில் வெளியான பிரஷாந்தின் அந்தகன் படத்தில் சமுத்திரக்கனியின் மனைவி கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். இதனிடையே தற்போது வனிதா இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார். மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ள வனிதா ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தில் டிரெய்லர் வெளியனது. படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளராக வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் களமிறங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர், தற்போது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். விரைவில் இவரை தமிழ் படங்களில் ஹீரோயினாக பார்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனிடையே, ஜோவிகாவின் பெயருக்கு பின்னால் இருக்கும் விஜயகுமார் என்ற பெயர் எப்படி வந்தது என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இது குறித்து வனிதா பதில் அளித்துள்ளார். நான் கணவரை பிரிந்து தனியாக இருக்கும்போது ஜோவிகா பிறந்தார். அமெரிக்காவில் மருத்துவமனையில் இவர் பிறந்ததால், அங்கு உடனடியாக பெயர் சொல்ல வேண்டும். ஜோவிகா பிறக்கும்போது ஆம்பிளை என்று என் மகன் மட்டுமே என்னுடன் இருந்தான். அதன்பிறகு எங்க அம்மா இருந்தாங்க.
மருத்துவமனையில் பெயர் கேட்டவுடன், இனிமேலும் கணவரின் பெயரை மகளுக்கு வைத்து அதன்மூலம் நான் பிரச்னையை சந்திக்க விரும்பவில்லை. எனக்கு பிரசவம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து என்னை அமெரிக்கா வரை அனுப்பி மருத்துவம் பார்த்தவர் எனது அப்பா விஜயகுமார். என் பெயருக்கு பின்னால் அவரது பெயர் இருப்பது போல் எனது மகளின் பெயருக்கு பின்னாலும் அவர் பெயர் இருக்க வேண்டும் என்று நினைத்து தான் மருத்துவமனையில் ஜோவிகா விஜயகுமார் என்று சொன்னேன்.
யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம். எனக்கு உயிர் கொடுத்த என் அப்பா என் மகள் பிறக்க காரணமாக இருந்த என் அப்பா விஜயகுமார் பெயரை என் மகளின் பெயருடன் வைத்திருக்கிறேன். பாலிவுட்டில் கபூர், பச்சன் என்று வைத்தால் ஏற்றுக்கொள்கிறீர்கள். இங்கு விஜயகுமார் என்ற தாத்தாவின் பெயர் பேத்திக்கு வைத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? என்று வனிதா விஜயகுமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.