Advertisment

பட வாய்ப்பு கேட்டேன்... முத்தம் கொடுத்தார் கமல் : வனிதா விஜயகுமார் அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்டரியாக உள்ளே வந்த அர்ச்சனா டைட்டில் வெற்றி பெற்றது குறித்து பலரும பாசிட்டீவாக பேசி வந்தாலும், ஒருசிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Vanitha Vijayakumar Kamalhaasan

கமல்ஹாசன் - வனிதா விஜயகுமார்

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் கட்டிப்பிடித்து முத்தம் வேண்டுமானால் கொடுப்பார் ஆனால் படத்தில் வாய்ப்பு கொடுக்கமாட்டார் என்று முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான வனிதா விஜயகுமார் ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய நிலையில், 106 நாட்கள் முடிந்து நேற்று கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்றது. மாயா, விஷ்ணு, தினேஷ், மணி, அர்ச்சனா ஆகியோர் பங்கேற்ற இறுதிச்சுற்றில், அர்ச்சனா சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், மணிசந்திரன் 2-வது இடத்தையும், மாயா 3-வது இடத்தை பிடித்தனர்.

இதில் வைல்ட் கார்டு என்டரியாக உள்ளே வந்த அர்ச்சனா டைட்டில் வெற்றி பெற்றது குறித்து பலரும பாசிட்டீவாக பேசி வந்தாலும், ஒருசிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்வர்களுக்கு தனது படத்தில் அல்லது தனது நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசன் வாய்ப்பு கொடுப்பதாக கூறியது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார், பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு வெளியேறினார். இந்த சீசனில் தனது மகளுக்காக பிக்பாஸ் விமர்சனம் செய்பவராக மாறிய வனிதா விஜயகுமார், கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுக்க மாட்டார் முத்தம் வேண்டுமானால் கொடுப்பார்.

எனது பிறந்த நாள் அன்று கமல் ஹாசன் சாரை சந்தித்தேன். அப்போது அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன். அவர் என்னை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். நான் இது வேண்டாம் பட வாய்ப்பு கொடுங்கள் என்று சொன்னபோது, பட வாய்ப்பு தானே பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார். ஆனால் இதுவரை எனக்கு வாய்ப்பு தரவில்லை என்று கூறியுள்ளார். வனிதாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனை தனது நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைப்பதாக கூறிய கமல்ஹாசன் இதுவரை அதை செய்யவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். அதேபோல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி நாராயணனுக்கு விக்ரம் படத்தில் வாய்ப்பு கொடுத்தார், அதே விக்ரம் படத்தில் நடித்த மாயாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanitha Vijayakumar Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment