Tamil Cinema Actress Varalakshmi New Swimming Video Viral On Social Media சரத்குமார், ராதிகா, வரலட்சுமி... நீச்சல் குளம் கொண்டாட்ட வீடியோ | Indian Express Tamil

சரத்குமார், ராதிகா, வரலட்சுமி… நீச்சல் குளம் கொண்டாட்ட வீடியோ

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடித்திருந்தார்.

சரத்குமார், ராதிகா, வரலட்சுமி… நீச்சல் குளம் கொண்டாட்ட வீடியோ

தென்னிந்திய சினிமாவின் முக்கிய வில்லி நடிகையாக வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வந்த சரத்குமார், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் கேரக்டர் நடிகராக முக்கியத்துவம் பெற்றுள்ளார்.

அதேபோல் இவரது மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா, சினிமா சின்னத்திரை என பிஸியாக வலம் வந்த நிலையில், சமீப காலமாக திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடித்திருந்தார். 

அதேபோல் போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சரத்குமாரின் மூத்த மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார்ஷ. அடுத்து தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு மலையாள மொழிகளில் பிரபலமான வில்லியாக வலம் வரும் வரலட்சுமி, கடந்த சில தினங்களாக இலங்கையில் முகாமிட்டுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைகப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் சரத்குமார் ராதிகா உள்ளிட்ட குடும்பத்தினருடன் இலங்கை சென்றுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress varalakshmi new swimming video viral on social media