scorecardresearch

கைநிறைய படங்கள்… குளிர் பிரதேசத்தில் குத்தாட்டம் போட்ட வரலட்சுமி!

தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார்.

தான் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பற்காக கொடைக்காகல் சென்றுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் அங்கு பாறை மீது நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார்.

நாயகி மட்டுமல்லாமல் வில்லி குணச்சித்திரம் என பன்முக திறமையுடன் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், தமிழில் தற்போது பார்த்திபனின் இரவின் நிழல், காட்டேரி பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, கலர்ஸ், யானை, யசோதா மற்றும் சபரி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது பாலகிருஷ்ணாவின் 107-வது படத்தில் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில். தனது படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்றுள்ள வரலட்சுமி திறந்த வெளியில் மேகங்களுக்கு இடையில் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த ஆட்டம் தொடர்பான வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் முதலில் வரலட்சுமி நேரடியாக ஆடுவதுபோல் தெரிந்தாலும், போக போக அவர் கண்ணாடி முன்பாக ஆடும் காட்சிகள் ரிவீல் ஆவது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress varalakshmi sarathkumar dancing in kodaikanal