/indian-express-tamil/media/media_files/uJr57XKULOwBZdk3XDKL.jpg)
வரலட்சுமி சரத்குமார் நிச்சயதார்த்தம்
தமிழ் தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், 14 ஆண்டுகால காதலை கரம் பிடிக்க உள்ளார்.
சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து மாணிக்யா என்ற கன்னட படத்திலும், கசபா என்ற மலையாளப்படத்திலும் நடித்த வரலட்சுமி நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லியாகவும் நடிப்பேன் என்று தைரியமாக நெகடீவ் ரோலில் நடித்து வருகிறார்.
குறிப்பாக விஷாலுடன் சண்டக்கோழி 2, விஜயுடன் சர்கார் உள்ளிட்ட படங்களில் பவர்ஃபுல் வில்லியாக நடித்து முத்திரை பதித்த வரலட்சுமி, இடையில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், வில்லியாக பல படங்களின் வெற்றியை பெற்றுள்ளார்.
சமீபத்தில் வெளியான கொன்றால் பாவம் என்ற படத்தில் நடித்திருந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் முக்கிய வில்லி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இவர்களது திருமண நிச்சயதார்த்தம், நேற்று (மார்க் 1) மும்பையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விரைவில் வரலட்சுமியின் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.