Advertisment

சென்னைக்கு டாட்டா... ஊரை விட்டே பறந்த வரலட்சுமி சரத்குமார்!

Tamil Cinema Actress : சமீபத்தில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான கிராக் மற்றும் நந்தி படங்கள் பெரிய வெற்றியை பெற்று வரலட்சுமிக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது.

author-image
WebDesk
New Update
சென்னைக்கு டாட்டா... ஊரை விட்டே பறந்த வரலட்சுமி சரத்குமார்!

Tamil Cinema Actress Movie In Hyderabad : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களின் ஒருவரான சரத்குமாரின் மகன் வரலட்சுமி சரத்குமார். தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையலகில் அறிமுகமானார். நாயகியாக சினிமாவில் அறிமுகமானாலும் செகடீவ் ரோல்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்து புகழ்பெற்றவர்தான் வரலட்சுமி.

Advertisment

தொடர்து வில்லி மற்றும் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இவர், பாலாவின் தாரை தப்பட்டை, விஜய் சேதுபதியில் விக்ரம் வேதா, தனுஷின் மாரி 2, விஷாலின சண்டைக்கோழி 2, விஜய்யின் சர்கார், உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதிலும் சண்டைக்கோழி 2 படத்தில் முக்கிய வில்லியாக நடித்த இவருக்கு பல தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

தமிழ் மட்டுமல்லது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, மலையாள படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான கிராக் மற்றும் நந்தி படங்கள் பெரிய வெற்றியை பெற்று வரலட்சுமிக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது. இதனால் தற்போது டேலிவுட்டில் வரலட்சுமிக்கு படவாய்ப்பு அதிகரித்து வரும் நிலையில், சமந்தாவின் யசோதா, சந்தீப் கிஷானின் மைக்கேல், அனுமான், ஆத்யா உள்ளிட்ட பல படங்களை கைவசம வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 5-ந் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் தெலுங்கு படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்ளகில் வைரலாகி வரும் நிலையில், வரலட்சுமி தற்போது தான் சென்னையை காலி செய்துவிட்டு ஹைதராபாத்தில் குடியேறப்போவதாக தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு எப்போதும் சிறந்த பிறந்தநாள்... நல்லது, கெட்டது மற்றும் பல சங்கடமான நேங்களில்,  எனக்காக எப்போதும் இருந்த இந்த அற்புதமான மனிதர்களுக்கு நன்றி. என்னுடைய கடைசி வார இறுதி நாட்களை அவர்களுடன் சென்னையில் கழித்ததே பெருமையாக இருக்கிற. "இது என் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம். ஹைதராபாத்??. ஆமாம், நான் ஹைதராபாத்க்கு செல்கிறேன். அதை பார்த்தக்கொண்டிருக்கிறேன். நான் பயமாகவும் பதட்டமாகவும் இருக்கிறேன் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது.

இவர்கள் எப்போதும் பின்வாங்குவார்கள் என்பதை நான் உறுதியாக அறிவேன். நான் சொல்வதை விட அதிகமாக உங்களை நேசிக்கிறேன், நான் உங்களுக்கு நன்றி சொல்ல முடியாது. என் குடும்பம். என் வாழ்க்கை. அனைவரும் எனது ஒரே குடும்பம் என்பதால் அவர்களை நண்பர்கள் உங்கள் அனைவரின் ஆசியும் அன்பும் ஆதரவும் எப்போதும் வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Varalakshmi Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment