கடந்த சில தினங்களாக நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் குறித்து வைரலாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது நிக்கோலாய் சொத்து மதிப்பு குறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான சரத்குமார் முதலில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு, சரத்குமார் நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் தனக்கும் சாயா தேவிக்கும் பிறந்த மகளாக வரலட்சுமியின் வாழ்க்கை குறித்த அனைத்து முடிவுகளும் சரத்குமாரே எடுத்து வந்துள்ளார்.
வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியா திரும்பிய அவர், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டபோது, அவரது அப்பா சரத்குமார் சம்மதிக்கவில்லை. இதனால் ஒருசில ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்த வரலட்சுமி ஒரு வழியாக அப்பா சம்மதத்துடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படம் வெற்றி இல்லை என்றாலும் வரலட்சுமியின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதன்பிறகு கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.
தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி வில்லி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலிப்பதாகவும், அவருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது.. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள நிக்லோய்க்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
இதனிடையே கடந்த ஜூலை 2-ந் தேதி வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில், சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற்றது. தற்போது நிக்கோலாய் எவ்வளவு சொத்துக்கு அதிபதி என்பது தொடர்பான பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் இது குறித்து பேசியுள்ளார். இதில் மும்பையில், ஆர்ட் கேலரி வைத்திருக்கும் நிக்கோலாய் மாதத்திற்கு சில ஓவியங்களை விற்றாலே கால் ஆட்டிக்கொண்டு அமர்ந்துவிடலாம்.
அவரது சொத்து மதிப்பு 850 கோடி வரை இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் பணத்தில் அவர் சரத்குமாரை விட பெரிய ஆள். இந்த திருமணத்தில் இன்டேஷன் கொடுத்தில் இருந்து, அதை பார்த்து தாய்லாந்து தீவில், திருமணம், சென்னையில் வரவேற்பு வரை அனைத்தையும் நிக்கோலாய் தான் பார்த்து பார்த்து செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.