சமீபத்தில் தனது முதல் திருமண நாளை தனது கணவருடன் கொண்டாடிய நடிகை வரலட்சுமி சரத்குமார், தற்போது தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் தனது கணவருடன் கொண்டாடிய ஒரு வீடியோ பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் வரலட்சுமி சரத்குமார். நாயகி என்று இல்லாமல், வில்லி, குணச்சித்திரம் என தனக்காக கேரக்டர்களை சரியாக தேர்வு செய்து நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்குப் பிறகு, படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.
தனது கணவருடன் திருமண வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வரும் வரலட்சுமி சரத்குமார், கடந்த ஆண்டு ஆறு படங்களில் நடித்த நிலையில், , இந்த ஆண்டு அவரது நடிப்பில் இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே வெளியாகியுள்ளது. இதனிடையே, சமீபத்தில், தனது முதல் திருமண நாளைக் கொண்டாடிய வரலட்சுமி, தற்போது தனது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்.
மேலும், சினிமாவைத் தாண்டி, வரலட்சுமிக்கு சமூக சேவை மீது அதிக ஆர்வம் கொண்ட வரலட்சுமி, இதற்கு முன்பு பலமுறை சமூக நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில், மீண்டும் ஒருமுறை தனது பெருந்தன்மையைக் காட்டிக் கொண்டார். 'ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் ஹ்யுமானிட்டி' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அனாதை குழந்தைகளுக்கு உதவ வரலட்சுமி முடிவு செய்தார்.
தனது கணவர் நிக்கோலாய் சச்தேவ்வுடன் சேர்ந்து, குழந்தைகளுக்குப் பிடித்தமான காலணிகள் மற்றும் செருப்புகளை அன்பளிப்பாக வழங்கினார். அவர்களுடன் நேரம் செலவழித்து, குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இது தொடர்பான ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வரலட்சுமி பகிர்ந்துள்ளார்.
அதில், "ஆறு மாதங்களுக்கு முன் நான் அளித்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியுள்ளேன்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவைக் கண்ட ரசிகர்கள், வரலட்சுமி மற்றும் அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ்வின் இந்த மனிதநேயப் பண்பை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
வரலட்சுமி சரத்குமார் தற்போது தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜய்யின் கடைசி படமாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. ஜன நாயகன் மட்டும் இல்லாமல், வரலட்சுமி, வேறு சில படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.