scorecardresearch

அரிதான ஒயின்… டாக்டர் என்னிடம் சொன்னார்: மதுபாட்டிலுடன் பிரபல நடிகை வைரல் வீடியோ

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள வேதிகா இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

அரிதான ஒயின்… டாக்டர் என்னிடம் சொன்னார்: மதுபாட்டிலுடன் பிரபல நடிகை வைரல் வீடியோ

கையில் மதுபாட்டியிலுடன் நடிகை வேதிகா வெளியிட்டுள்ள வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

2006-ம் ஆண்டு அர்ஜூன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான மதராஸி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வேதிகா. தொடர்ந்து முனி, காளை, மலை மலை, காவிய தலைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த வேதிகா கடைசியாக தமிழில் காஞ்சனா 3 என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள வேதிகா இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில், வினோதன் மற்றும் ஜங்கில் உள்ளிட்ட 2 படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா அவ்வப்போது தனனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்

அந்த வகையில் தற்போது அவர் கையில் ஒயின் பாட்டிலுடன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் அரிதான ஒயின் மருத்துவர் என்னிடம் கூறினார். நான் குடிப்பது அரிது என்று அவர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress vedhika reels video with wine bottle