/indian-express-tamil/media/media_files/2025/06/12/nV7a8Zh5eK3gWsovBs0q.jpg)
இணையதள வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்கள் சந்தித்த பாலியல் தொடர்பான சர்ச்சை குறித்து மீடூ-ல் பதிவு செய்து வரும் நிலையில், இதற்கு பழம்பெரும் நடிகை வென்னிறஆடை நிர்மலா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த நடிகைகள் பலரும் மீடூ-வில் தங்கள் பாலியல் ரீதியாக துன்பங்களை அனுபவித்ததாக பதிவிட்டு வருகின்றனர். இதில் இன்றுவரை பற்றி எரியும் ஒரு சம்பவமாக இருப்பவர் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது கொடுத்த புகார் தான். கடந்த சில ஆண்டகளாக இந்த பிரச்னை பெரும் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், சின்மயிக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பும் குறைந்துவிட்டது.
கடந்த 2002-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான சின்மயி, அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், இந்திய, மராத்தி, உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் கமல்ஹாசனின் தக் லைப் படத்தில் சின்மயி குரலில் வெளியான முத்தமழை பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
அதே சமயம், இவர் கவிஞர் வைரமுத்து மீது வைக்கப்பட்ட பாலியல் குற்ச்சாட்டு, தற்போதுவரை ஒரு முடிவு இல்லாமல், அவ்வப்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு சம்பவமாக மாறியுள்ளது. இதனிடையே மீடூ விவகாரம் குறித்து பேசியுள்ள பழம்பெரும்நடிகை வென்னிறஆடை நிர்மலா, இந்த மீடூ எனக்கு கன்றாவியான ஒரு விஷயம் மீடூன்னு இன்னைக்கு சொல்றவங்க, அன்னைக்கு என்ன பண்ணிட்டு இருந்தாங்க? அவங்களுக்கு ஏதோ ஒரு விதத்துல ஏதோ ஒரு வேலை நடக்கணுங்கிறதுக்காக தானே அவங்க போனாங்க?
அது என்ன இப்ப வந்துட்டு மீடூ சொல்றாங்க. அந்த மனுஷன் வந்து பேரன் பேத்தி எடுத்து ஒரு நல்ல அந்தஸ்துல இருக்குறப்போ எனக்கு வந்து மனசு வந்து அறுக்குது துடைக்குது, அப்ப அவன் அந்த மாதிரி பண்ணான்னு சொல்லி இப்ப, எதுக்கு வாயை திறக்கணும்? அப்ப என்ன பண்ணிட்டு இருந்தாங்க? இவங்க ஏன் போனாங்க என்ற ஒரு கேள்வி இருக்குல்ல? இதை நான் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
இவங்களுக்கு ஏதோ ஒரு வேலை நடக்கணும், அதுக்காக என்னமோ பண்ணிட்டு, இப்ப வந்துட்டு மீடூ மீடூன்னு ஒருத்த ஒருத்தனும் ஆரம்பித்தார்கள் என்றால், அப்ப எதுக்காக இவங்க இவ்வளவு நாள் வாயை மூட்டிட்டு இருந்தாங்க? அவர் ஒரு அந்தஸ்துல வந்ததுக்கு அப்புறம் ஏதாவது சொல்லி அவர் பேர்ல கலங்கம் ஏற்படுத்தணும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.